தனியார் நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமனம - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, September 1, 2022

தனியார் நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமனம

பள்ளிகளில் கழிப்பறைகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வதற்கு தூய்மை பணியாளர்கள் அனைவரும், தனியார் நிறுவனம் மூலமாக நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளிலும் கல்வித்துறை அலுவலகங்களிலும் மிகக் குறைந்த சம்பளத்தில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

உள்ளாட்சித் துறையின் மூலம் நியமனம் செய்யப்படும் தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 2 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வருகின்றனர். https://t.me/Kalviseithiofficial.com மேலும் பள்ளிக்கல்வித்துறையில் பணியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்து, முறையான ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிகளில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணியாளர்களை நியமிக்க கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நிதி அமைச்சரை சந்தித்து விரைவில் பேச இருப்பதாகவும், அதில் தூய்மை பணியாளர் நியமனம் குறித்தும் இடம் பெறும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அரசு அனுமதி அளித்த உடன், மாநிலம் முழுவதும், தனியார் நிறுவனம் மூலம் பல ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.