Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்வதற்கான அரசாணை - அரசாணை (1டி) எண்.220 - நாள்:05.08.2022 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 8, 2022

Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்வதற்கான அரசாணை - அரசாணை (1டி) எண்.220 - நாள்:05.08.2022

நடப்பு கல்வியாண்டில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது

விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய, தேர்வுக்குழுக்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
Dr.இராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)

சுருக்கம்

பள்ளிக் கல்வி 2021-22 ஆம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது கல்வியாண்டிற்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகள் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக் கல்வி(பொது-II)த் துறை

அரசாணை (1டி) எண்.220

நாள்:05.08.2022.

திருவள்ளுவராண்டு 2053,

சுபகிருது வருடம் ஆடி 20. படிக்கப்பட்டவை:

1. அரசாணை (1டி) எண்:122, பள்ளிக் கல்வித்(பொது-II)த்துறைநாள். 03.08.2021.

2. பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் கடித ந.க.எண்.46500/ஐ/2022, நாள்11.07.2022.

ஆணை:-

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, 2020-2021-ஆம் கல்வியாண்டு முதல் சில நடைமுறை மாற்றங்களை மேற்கொண்டு பள்ளிக்கல்வி ஆணையரின் தலைமையில் 11 உறுப்பினர்களை கொண்ட மாநிலத் தேர்வுக்குழு அமைத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை மயிலாடுதுறை வருவாய் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளதால் 2021-22ஆம் கல்வியாண்டு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கிட, திருத்திய எண்ணிக்கையின் அடிப்படையில், 38 வருவாய் மாவட்டத்திற்கு விருதுகள் வழங்கிட அரசாணை வழங்குமாறும், தற்போது பள்ளிக் கல்வித் துறையில் 38 வருவாய் மாவட்டங்களாக நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளதாலும், 2021-2022 ஆம் கல்வியாண்டு முதல் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகளின் எண்ணிக்கையை 386 ஆக நிர்ணயம் செய்திடவும், மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணையிடப்பட்ட மாநிலத் தேர்வுக்குழு மற்றும் மாவட்டத் தேர்வுக்குழு தொடர்ந்து செயல்படவும் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்தும் அரசாணை வழங்கிடுமாறும் பள்ளிக் கல்வி ஆணையர் கேட்டுகொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.