நீட் தேர்வில் 45 நிமிடங்களுக்கு பின் வினாத்தாள் மாற்றி வழங்கல்: மாணவர்கள் அதிர்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 17, 2022

நீட் தேர்வில் 45 நிமிடங்களுக்கு பின் வினாத்தாள் மாற்றி வழங்கல்: மாணவர்கள் அதிர்ச்சி

அறந்தாங்கி அருகே தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோவில்வயல் எஸ்எப்டி தனியார் பள்ளியில் நேற்று 478 மாணவ மாணவியர் எம்பிபிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதினர்.

பகல் இரண்டு மணிக்கு தேர்வு தொடங்கியதும், தேர்வு கூட அலுவலர்கள் மாணவ, மாணவியருக்கு வினாத்தாள்களை வழங்கினர். அதை பெற்றுக் கொண்டு தேர்வை எழுதிக் கொண்டிருந்தனர். 45 நிமிடங்கள் கழித்து தேர்வு கூட அலுவலர்கள் ஏற்கனவே வழங்கிய வினாத்தாள்களை பெற்றுக்கொண்டு புதிதாக மற்றொரு வினாத்தாளை வழங்கி அதன்படி தேர்வு எழுத அறிவுறுத்தினர்.

இதையும் படிக்க | NEET 2022 Exam Paper Analysis, Answer Key & Question Paper Solutions - PDF

தேர்வு எழுதத் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு வினாத்தாள் வழங்கியதால் மாணவ, மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் அவர்கள் புதிய வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை எழுதத் தொடங்கினர். சுமார் 45 நிமிடங்கள் தாமதமானதால் தேர்வுக் கூட அலுவலர்கள் மாலை 6 மணி வரை தேர்வு எழுத அனுமதி வழங்கினர். மாணவர்கள் 5.30 மணியாகியும் தேர்வு கூடத்தில் இருந்து வெளியே வராததால் காத்திருந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகை இட முயன்றனர். அப்போது தனியார் பள்ளியின் நிர்வாகி பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்ததால் அமைதியானார்கள். * மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டோம்


இதுகுறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:

இந்த நீட் தேர்வில் முதலாவதாக வழங்கப்பட்ட வினாத்தாள்கள் எளிமையாக இருந்தது. நாங்கள் ஆர்வத்துடன் விடைகளை எழுதிக் கொண்டிருந்தோம். அப்போது தேர்வை கண்காணித்துக் கொண்டிருந்த தேர்வு கூட அலுவலர்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு பிறகு திடீரென எங்களிடமிருந்த வினாத்தாள்களை பெற்றுக் கொண்டு புதிதாக வினாத்தாளை வழங்கினர். அது மிகவும் கடினமாக இருந்தது. இதனால் நாங்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

தேர்வில் வெற்றி பெறுவதும் அதிக மதிப்பெண் பெறுவதும் சந்தேகமாக உள்ளது. என்ன காரணத்திற்காக எளிமையாக இருந்த வினாத்தாளை பெற்றுக்கொண்டு சுமார் முக்கால் மணி நேரத்திற்கு பிறகு புதிய வினாத்தாள் அடிப்படையில் தேர்வு எழுத அதிகாரிகள் உத்தரவிட்டார்கள் என்பதே தெரியவில்லை. இது குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மாணவ மாணவியர்கள் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.