பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 17, 2022

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கவனத்திற்கு

போட்டி தேர்வுக்கு தயாராகும் நபர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்: கலெக்டர் அறிவுறுத்தல்

பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் நபர்கள் மெய்நிகர் கற்றல் வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் மேலும் 2,316 பேருக்கு கரோனா பாதிப்பு - Media Bulletin 17.07.2022 - PDF

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4, விஏஓ மற்றும் தொகுதி VII/ VIII ஆகிய தேர்வுகளுக்கும், ஒன்றிய அரசால் நடத்தப்படும் ஐபிபிஎஸ், எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி, இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மற்றும் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி-பதில்கள் ஆகியன மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித்தேர்வர்கள் இந்த வலைதளத்தில் தங்களை பற்றிய விவரங்களை உள்ளீடு செய்து, இந்த https://tamilnaducareerservices.tn.gov.in என்ற வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.