தமிழகத்தில் 5050 எம்.பி.பி.எஸ். அரசு இடங்களுக்கு கடும் போட்டி நிலவும் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 26, 2022

தமிழகத்தில் 5050 எம்.பி.பி.எஸ். அரசு இடங்களுக்கு கடும் போட்டி நிலவும்

இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. நீட் தேர்வு கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 26 அரசு மருத்துவ கல்லூரிகள் மூலம் மாநில அரசுக்கு மொத்தம் 3032 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தது. இந்த வருடம் கூடுதலாக 2 ஆயிரம் இடங்கள் கிடைக்கிறது. தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகள் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்படுகிறது. இந்த கல்லூரிகள் மூலம் 1450 இடங்களும், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களுக்கும் மத்திய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை மட்டும் இந்த ஆண்டு 5050 ஆக உயர்ந்து உள்ளது.www.kalviseithiofficial.com இது தவிர 32 தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் 5370 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 10,425 இடங்களில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வருடம் மருத்துவ படிப்புகளில் சேர தயாராக இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு இது ஒரு 'ஜாக்பாட்' ஆக கருதப்படுகிறது. ஒரே வருடத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மூலம் இந்த வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. புதிதாக தொடங்கப்படும் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்த்து இதன் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் உள்ள அரசு மருத்துவ இடங்கள் 5050-ல் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் போக 92.5 சதவீத இடங்கள் மற்ற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. நீட் தேர்வு கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவு ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் வர வாய்ப்பு உள்ளது. அதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவு தொடங்கும் என்று மருத்துவ கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை பொறுத்துதான் கட்-ஆப் மார்க் கூடுவதோ அல்லது குறைவதோ தெரியவரும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் மாணவர்கள் அதிகளவு தேர்வு எழுதி உள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 227 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த வருடம் இந்த எண்ணிக்கை 350 வரை உயர வாய்ப்பு உள்ளது. அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. www.kalviseithiofficial.com அதனால் இந்த ஆண்டு 2000 அரசு மருத்துவ இடங்கள் அதிகரித்தாலும் அதற்கு கடுமையான போட்டி நிலவும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதலில் அகில இந்திய மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட பிறகுதான் தமிழகத்தில் மருத்துவ கவுன்சிலிங் தொடங்கும். நீட் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் எவ்வளவு மதிப்பெண் தங்களுக்கு கிடைக்கும் என்று கணக்கு போட்டு எதிர்பார்த்து உள்ளனர். நீட் தேர்வில் 450 மதிப்பெண்க ளுக்கு மேல் எடுக்கும் மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு மருத்துவ இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வு முடிவு எப்போது வரும்? மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என்ற மருத்துவ கனவில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.