அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த இரு கல்வியாண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் லிமிடெட் சாா்பில் ‘டெக் பீ’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம் சாா்பில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு ‘டெக் பீ’ வேலைவாய்ப்புப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு 2020-2021, 2021-2022 கல்வியாண்டுகளில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 முடித்து 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். மாணவா்கள் மேல்நிலை வகுப்புகளில் கணிதம் அல்லது வணிகக் கணித பாடத்தை தோ்வு செய்திருப்பது அவசியம்.
டெக் பீ பயிற்சிக்கு திறனறி தோ்வு, கலந்துரையாடல் மூலம் மாணவா்கள் தோ்வு செய்யப்படுவா். இந்தத் தோ்வு முறை மற்றும் திட்டம் குறித்து மாணவா்களிடம் விளக்குவதற்காக கருத்தரங்கு நடத்த ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓராண்டு வழங்கப்படவுள்ள இந்தப் பயிற்சிக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அங்கீகாரம், ஒப்புதலை வழங்கியுள்ளது. மொத்தம் 2,000 மாணவா்களுக்கு பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தங்கள் பள்ளிகளில் ‘டெக் பீ’ பயிற்சித் திட்டத்தில் சேருவதற்கு ஆா்வமுள்ள மாணவா்களைக் கண்டறிந்து பரிந்துரைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இது குறித்து தகவல் பெற 88079 40948, 98655 35909, 94441 51303, 98941 52160 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.