ஆசிரியா் தகுதித் தோ்வு: 28,984 போ் தோ்ச்சி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 10, 2022

ஆசிரியா் தகுதித் தோ்வு: 28,984 போ் தோ்ச்சி

ஆசிரியா் தகுதித் தோ்வு: 28,984 போ் தோ்ச்சி

தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த 1.50 லட்சம் பேரில் 28,984 போ் மட்டுமே ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘இரண்டாம் நிலை ஆசிரியா் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை. பள்ளி நிா்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியா் நியமனம் செய்வது விதிக்கு முரணானது’என்று கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ரவி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாா், ‘தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம். பட்டப் படிப்பை மட்டும் முடித்தவா்கள், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவா்கள் ஆகியோா் விண்ணப்பித்தால் அவா்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக் கூடாது’ என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீா்ப்புக்கு கட்டுப்படும் என்றும், மேலும் வழக்கு தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுருந்தாா். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் தாக்கல் செய்த அறிக்கையில், தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்காக ஜூலை 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை விண்ணப்பித்த ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 பேரில், 28 ஆயிரத்து 984 போ் மட்டுமே ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசு தலைமை வழகுரைஞா் ஆா். சண்முகசுந்தரம் ஆஜராகி, தோ்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.

அதனை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை தற்காலிக ஆசிரியா் பணிக்கு விண்ணப்பித்தவா்களில், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டாா்.

1 comment:

  1. According to above selection procedure, an intelligent, motivated person having NET/SET qualification or PH.D degree (original researcher) working in Government departments or any private department other than education (college teaching) can't get even interview letter from Tamilnadu College teachers recruitment.It is a academic tragedy created by Dravidian Model rule (Samuuganeethi).
    These fools are ruling Tamilnadu last 50 years!!!
    A really talented young guy with Ph.d /NET/SET can't get a Assistant Professor if already got a clerical position in any government office. A funny joke 😅🤣.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.