TRB - Tamil BTs Regularization Order - 2010-2011ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 10.10.2012ல் பணி நியமன ஆணை பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 18, 2022

TRB - Tamil BTs Regularization Order - 2010-2011ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 10.10.2012ல் பணி நியமன ஆணை பெற்ற தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள்,

சென்னை - 600 006. ஒ.மு.எண்.102882/சி5/இ2/2010 நாள். 11-03-2015.

பொருள் -

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - பட்டதாரி ஆசிரியர்கள் (தமிழ்) நேரடி நியமனம் - 2010-2011-ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் - முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் - சார்ந்து.

பார்வை

சென்னை-6, பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.102882/சி5/இ2/2010 நாள். 10 10-2012.

2010-2011ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டு பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகள் ந.க.எண். 102882/5/2/2010 மூலம் வழங்கப்பட்ட நியமனங்கள் அனைத்தும் அவ்வாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் முறையான நியமனமாக முறைப்படுத்தி இதன்மூலம் ஆணை வழங்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ள மேற்படி ஆசிரியர்களுக்கு தனியாக பணிவரன்முறை செய்யப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட செயல்முறைகளின்படி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் சார்பாக தகுதிகாண் பருவம் முடித்தமைக்கான உத்திரவு வழங்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மையினை உறுதி செய்து அதற்கான சான்றினை முன்னிலைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென சார்ந்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இச்செயல்முறைகளின் நகல்களை சார்ந்த ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் மூலமாக அனுப்பி வைப்பதோடு அவர்களது பணிப்பதிவேடுகளில் உரிய பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.