TET தேர்வில் ‘பாஸ்’ செய்யாவிட்டால் ஊதிய உயர்வு பெறும் தகுதியில்லை; பணியிலும் நீடிக்க முடியாது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

TET தேர்வில் ‘பாஸ்’ செய்யாவிட்டால் ஊதிய உயர்வு பெறும் தகுதியில்லை; பணியிலும் நீடிக்க முடியாது!

The Chennai High Court has ruled that those who do not qualify for the Teacher Qualification Test are not eligible to continue in the teaching profession.

The United States introduced the Right to Education Act in 2009. In 2011, the Government of Tamil Nadu issued an order requiring those appointed as teachers under this Act to have passed the Teacher Qualification Examination with 60 percent marks.

In this situation, teachers who were appointed as teachers before 2011, claiming that they did not qualify in the teacher qualification examination, were ordered by the Tamil Nadu School Education Department to suspend their annual salary increase. The cases filed on behalf of the teachers against this came up for hearing before Judge D. Krishnakumar. At the time, Additional Advocate General Silampannan appeared and said that those who failed the Teacher Qualification Examination, which was given 12 years, were not entitled to a pay rise. At that time, advocates Wimal P. Grimson and G. Sankaran, appearing for the petitioners, argued that the Teacher Qualification Examination was not conducted annually.

The judge, after hearing all the arguments, declared that under the Right to Education Act, unqualified teachers who have passed 12 years and are not entitled to a pay rise are not entitled to pass the qualifying examination. Without the implementation of the Right to Education Act provisions introduced 12 years ago, it will not be possible to accept that teachers are allowed to continue in office. Those who do not qualify for the Teacher Qualification Examination are not eligible to continue in the teaching profession. Only teachers who advance themselves in knowledge, skills, and technology can train effectively. Quality teacher education is essential now. The Government of Tamil Nadu should conduct an annual Teacher Qualification Examination. He ordered that the rules of the state in this regard should be strictly enforced. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும் கூறியுள்ளது.

ஒன்றிய அரசு, கடந்த 2009ம் ஆண்டு கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று 2011ல் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், 2011ம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறவில்லை எனக் கூறி, அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் ஆஜராகி, 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை என்று தெரிவித்தார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் விமல் பி.கிரிம்சன், ஜி.சங்கரன் ஆகியோர், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுவதில்லை என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல், ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதித்துள்ளதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதியில்லை.

அறிவு, திறமை, தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும். தரமான ஆசிரியர் கல்வியே தற்போது அவசியம். தமிழக அரசு ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். இதுசம்பந்தமான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.