வகுப்பறையில் மது குடித்த 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, April 7, 2022

வகுப்பறையில் மது குடித்த 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

The video of a student drinking alcohol on a desk in a private college classroom caused a stir as the video went viral. 6 people were suspended in this connection. Over the past few months, the drinking scene of school and college students across Tamil Nadu has been spreading fast on social media. This has caused many parents great pain. Meanwhile, first-year students at a private college of arts and science near Kanchipuram, sitting on a classroom table drinking outdoor wine and soft drinks, are now spreading fast on social media. More than 1000 students are studying at a private college of arts and sciences near Kanchipuram. The scene of some of the first-year students here drinking wine and soft drinks at the classroom table is spreading fast on social media.

The incident went to the attention of the concerned college principal. He subsequently conducted an investigation. In it, a student in the same class admitted that he had bought alcohol and that the students had drunk it. Following this, the parents were called and the students were advised. Subsequently, the college administration ordered the suspension of one student and 5 students on their assurance that such a mistake would not happen. தனியார் கல்லூரி வகுப்பறையின் மேஜையில் வைத்து மதுபானம் குடித்த மாணவ, மாணவிகளின் வீடியோ வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 6 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல பெற்றோர் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இந்த வேளையில், காஞ்சிபுரம் அருகே தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவிகள், வகுப்பறை மேஜை மேல் அமர்ந்து கொண்டு வெளிமாநில மதுவை, குளிர்பானத்தில் கலந்து குடிக்கும் காட்சி, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. காஞ்சிபுரம் அருகே இயங்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு முதலாமாண்டு படிக்கும் மாணவிகள் சிலர், வகுப்பறை மேஜையில் மதுவில், குளிர்பானத்தை கலந்து குடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இச்சம்பவம், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அவர், விசாரணை நடத்தினார். அதில், அதே வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், மதுபானம் வாங்கி வந்ததையும், அதை மாணவிகள் குடித்ததையும் ஒப்பு கொண்டனர். இதையடுத்து அவர்களது பெற்றோரை அழைத்து விசாரித்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறப்பட்டது. தொடர்ந்து, இதுபோல் தவறு நடக்காது என அவர்கள் உறுதியளித்ததன் பேரில் ஒரு மாணவன், 5 மாணவிகளை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.