அரசு காலி பணியிடங்களை நிரப்ப புதிய வழிமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, March 19, 2022

அரசு காலி பணியிடங்களை நிரப்ப புதிய வழிமுறை

அரசு துறைகளில் காலி பணியிடங்கள் அதிக அளவில் உள்ள அதே வேளையில், சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம். நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளை சீரமைப்பது மிகவும் அவசியமானது. பணியமர்த்தல் மற்றும் பயிற்சிக்கான விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியினை இந்த ஆண்டு தொடங்கியுள்ளோம்.

இதையும் படிக்க | தமிழக பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்: ஊழியர் சங்கம் கருத்து

மனிதவளம் தொடர்பான சீர்திருத்தங்கள் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை 6 மாத கால அளவிற்குள் முன்மொழிவதற்காக ‘மனிதவள சீர்திருத்தக் குழு’ ஒன்று அமைக்கப்படும். அரசின் தணிக்கை துறைகளை ஆய்வு செய்து, சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேவையான பரிந்துரைகளை வழங்கிட, ஓர் ஓய்வு பெற்ற இந்திய தணிக்கை மற்றும் கணக்கு பணி அலுவலர் தலைமையில் ஓர் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, 4 மாதங்களில் தனது அறிக்கையை வழங்கும். வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை வழங்குவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். இதனை உறுதிசெய்ய, 01-04-2023 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் கொள்முதல்களுக்கும் ‘மின்னணு - கொள்முதல் முறை’ கட்டாயமாக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.