பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது - கல்வித் துறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது - கல்வித் துறை

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவர்களை கண்டிக்கக் கூடாது - கல்வித் துறை

பள்ளிக்கு தாம தமாக வரும் மாணவர்களைக் கண் டிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகனுக்கு, வழக்கு ரைஞர் சார்லஸ் என்பவர் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அதில், 'தாமதமாக வரும் மாண வர்களை வெளியில் நிற்க வைப் பது, வளாகத்துக்குள் நுழைய அனு மதி மறுப்பது உள்ளிட்ட நடவடிக் கைகளை தனியார் பள்ளிகள் மேற் கொள்கின்றன. இவை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்றாலும், மாண வர்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுப்பது மட்டுமன்றி, அவர்களைக் கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கு கின்றன. மேலும், குழந்தைகளை திருப்பி அனுப்புவது அல்லது பள்ளிக்கு வெளியே அனுப்புவது சாலை விபத்து போன்ற பிற பாதுகாப்பு அச் சுறுத்தல்களும் உருவாகும்.

எனவே, மாணவர்கள் நலனை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டி ருந்தது.

இதையடுத்து தாமதமாக வரும் மாணவர்களை, பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுப்பதோ, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவோ கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு தற் போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 'பள்ளிக் கல்வித் துறை செயலரின் அறிவுறுத்தலின்படி, தாமதமாக பள் ளிக்கு வரும் மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து திருப்பி அனுப் பவோ, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவோ அல்லது எந்தவிதமான தண்டனைகளுக்கும் உள்ளாக்கவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது


The Tamil Nadu School Education Department has issued an order prohibiting schools from punishing students who arrive late.

Schools are specifically forbidden from refusing entry, making students stand outside the classroom, or sending them home, as this denies their right to education and causes mental distress.

The directive highlights safety concerns, noting that turning students away or sending them out can expose them to traffic accidents and other dangers.

Private schools must ensure student welfare, and strict action will be taken against those violating this mandate.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.