New Curriculum Implementation: A new curriculum is being introduced for classes 4 through 8, scheduled to begin in the upcoming academic year.
Planning Committee Meeting: A meeting led by Minister Rajmohan was held in Chennai to discuss the preparation and design of this new curriculum.
Focus on Skill Development: The discussions focused on creating a curriculum that reduces rote learning and emphasizes skill-based education, modern technology, and interactive learning methods.
Phased Rollout: While the focus is currently on classes 4-8, there are plans to expand these curriculum updates to classes 1 through 12 in a phased manner.
அடுத்த கல்வியாண்டு முதல் 4 முதல் 8-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம்
தயாரிப்பு பணி குறித்து அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் ஆலோசனை
சென்னை, ஜூலை 22-
அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு கூட்டத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் 4 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட உள்ள புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வல்லுநர் குழு கூட்டம்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கான கலைத்திட்டம், இலக்குகள், திறன்கள், கற்றல் விளைவுகள் போன்றவை உயர்மட்ட, கலைத்திட்ட வடிவமைப்பு குழுவினருக்கு எடுத்துரைக்கப்பட்டன.
6 முதல் 8-ம் வகுப்புகளின் பாடத்திட்ட வரைவுகள் ஒப்புதலுக்கு என விவரிக்கப்பட்டன. மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப ஏஐ (AI) தொழில்நுட்ப பாடத்திட்ட அறிமுகம் குறித்தும் பேசப்பட்டது. அடுத்த கல்வியாண்டில் 4 முதல் 8-ம் வகுப்புகளுக்கும், தொடர்ந்து அதற்குடுத்த கல்வியாண்டில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கும் புதிய பாடநூல்கள் வெளிவரவிருப்பது குறித்தும் அதற்கான முன் தயாரிப்பு பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எளிய நடை
இந்த கூட்டத்தில், இஸ்ரோவின் முன்னாள் இயக்குநரும், புதிதாக மாற்றியமைக்கப்பட்ட கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் வி.நாராயணன், கல்வி உரிமை ஆர்வலர் அனந்த்ஜித் மகிஷா உள்ளிட்ட உயர்மட்ட மற்றும் கலைத்திட்ட குழுவினர் நேரில் கலந்து கொண்டு பள்ளிக்கல்விக்கான பாடத்திட்டம், பாடநூல்களின் கட்டமைப்பு, பாடப்பொருள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
பாடநூல்கள் எளிய மொழி நடையுடனும் குழந்தைகளைக் கவரும் வகையில் வண்ணப் படங்களுடனும் அமைய வேண்டும், மனப்பாட முறையைக் குறைத்து புரிந்து படிக்கும் ஆழமான கற்றலுக்கான வாய்ப்பை வழங்கும் வண்ணம் அமைய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. செய்து கற்று உணரும் வகையிலும், தரவுகளின் அடிப்படையிலும், வகுப்பறையில் குழந்தைக்கு அதிக இடம் கொடுக்கும் வகையிலும், பேச்சாற்றல், எழுத்தாற்றலை வளர்க்கும் வகையிலும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எதிர்கால செயல்பாடுகள்
கலிபோர்னியா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநர் அழகியசிங்கம், டி.வி.வெங்கடேஸ்வரன் மற்றும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் எஞ்சல் ரத்னாபாய் உள்ளிட்டோர் இணைய வழியில் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்தனர். உயர்மட்ட குழுவின் துணைத்தலைவரும், பள்ளிக்கல்வித்துறையின் கூடுதல் தலைமைச்செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பின் பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார்.
கூட்டத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் லதா, பாடவாரியான துணைக்குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.