கல்வித்துறையில் 'பசை'யாய் ஒட்டிய அலுவலர்கள் 3 ஆண்டுகளை கடந்தும் கோலோச்சுவதாக சர்ச்சை - அசைக்க முடியாத அதிகாரிகள் சிபாரிசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

கல்வித்துறையில் 'பசை'யாய் ஒட்டிய அலுவலர்கள் 3 ஆண்டுகளை கடந்தும் கோலோச்சுவதாக சர்ச்சை - அசைக்க முடியாத அதிகாரிகள் சிபாரிசு

கல்வித்துறையில் 'பசை'யாய் ஒட்டிய அலுவலர்கள் 3 ஆண்டுகளை கடந்தும் கோலோச்சுவதாக சர்ச்சை - அசைக்க முடியாத அதிகாரிகள் சிபாரிசு

This article discusses controversy surrounding education department officials in Madurai, Tamil Nadu, remaining in the same positions for over three years.

It highlights concerns that officials are using influence to avoid mandatory transfers, causing dissatisfaction among those waiting for postings.

The report mentions that such transfers are supposed to happen annually to prevent corruption and ensure administrative rotation.

அசைக்க முடியாத அதிகாரிகள் சிபாரிசு

மதுரை, ஜூன் 8-

கல்வித்துறை அலுவல கங்களில் 3 ஆண்டுகளுக் கும் மேல் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். அதி காரிகள் சிபாரிசால் 'பசை போல்' அவர்கள் ஒரே இடத்தில் ஒட்டிக்கொண் டிருப்பதால் மாறுதல் பார்த்து காத்திருக்கும் பிற அலுவலர்கள் அதிருப்தி யில் உள்ளனர். மாநில அளவில் கல்வி அலுவலகங்களில் 12 ஆயி ரம் பேர் பணியில் உள்ள னர். நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்த்தப்பட்ட கண்கா ணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் ஆகியோ ருக்கு ஆசிரியர்கள் போல் ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதில் என விதி ஒரே இடத்தில் 3 ஆண்டு எதிர் களுக்கு மேல் பணியாற்று வோரை மாறுதல் செய்ய வேண்டும் உள்ளது.

ஆனால் விதிமீறி பலர் ஒரே இடத்தில் 4 ஆண்டு களைத்தாண்டியும் பணியில் நீடிக்கின்றனர். வசதி யான அலுவலர்கள் அதிகாரி களின் சிபாரிசு மூலம் வேண்டிய இடத்திற்கு மாறுதல் பெற்றுக்கொள் கின்றனர்.

ஆனால் இட மாறுதல் கலந்தாய்வு நடக் காதது, 3 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிப் போரை மாற்றும் விதியை பின்பற்றாதது போன்றவற் றால், பாதிக்கப்பட்ட அலு வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


கல்வித்துறை அலுவ லர் சங்க நிர்வாகிகள் கூறி யதாவது:

ஒரே இடத்தில் மூன்று ஆண்டுக்கு மேல் பணியாற்றினால் முறை கேடு நடக்க வாய்ப்பு ஏற் படும் என்பதற்காகவே இந்தப் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர்.

ஆனால் விதிகளை மீறி அதிகாரிகள் சிபாரிசு மூலம் அவர்கள் அதே இருக்கை யில் தொடர்கின்றனர்.

மதுரை உட்பட தொடக் கக் கல்வி அலுவலகங் களில் இதுபோன்றோர் எண்ணிக்கை அதிகம் உள் ளன. கல்வி அலுலர்களுக் கான கலந்தாய்வு ஜூனில் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு நடப்பதற்கான அறிகுறி இதுவரை தென் படவில்லை. ஒரே இடத் தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டிக்கொண் டுள்ளோரை பணியிட மாற்றம் செய்ய இயக்குநர் கள் கண்ணப்பன், நரேஷ் உத்தரவிட வேண்டும் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.