ஆசிரியர்கள் தேவை - 4 நிரந்தர பணியிடங்கள் - 21.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, July 21, 2026

ஆசிரியர்கள் தேவை - 4 நிரந்தர பணியிடங்கள் - 21.07.2026 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர்கள் தேவை - 4 நிரந்தர பணியிடங்கள் - TET Pass

நான்கு பாடப்பிரிவுகளுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேவை – TET Paper-II தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

தனியார் கல்வி நிறுவனத்தில் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் (BT Assistant) பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அனைத்து பணியிடங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET Paper-II) தேர்ச்சி கட்டாயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடவாரியாக கல்வித்தகுதி மற்றும் சமூகப் பிரிவு விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் பாடத்திற்கு SCA பிரிவு, ஆங்கிலத்திற்கு MBC பிரிவு, சமூக அறிவியலுக்கு BC பிரிவு, கணிதத்திற்கு OC பிரிவு விண்ணப்பதாரர்கள் தேவைப்படுகின்றனர். சமூக அறிவியல் பணியிடத்திற்கு B.A., B.Ed. அல்லது B.Sc., B.Ed. தகுதியும் ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடவாரியான பணியிடங்கள்

தமிழ்

சமூகப் பிரிவு: SCA

கல்வித்தகுதி: B.A., B.Ed.

கூடுதல் தகுதி: TET Paper-II தேர்ச்சி

ஆங்கிலம்

சமூகப் பிரிவு: MBC

கல்வித்தகுதி: B.A., B.Ed.

கூடுதல் தகுதி: TET Paper-II தேர்ச்சி

சமூக அறிவியல்

சமூகப் பிரிவு: BC

கல்வித்தகுதி: B.A., B.Ed. / B.Sc., B.Ed.

கூடுதல் தகுதி: TET Paper-II தேர்ச்சி

கணிதம்

சமூகப் பிரிவு: OC

கல்வித்தகுதி: B.Sc., B.Ed.

கூடுதல் தகுதி: TET Paper-II தேர்ச்சி விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள ஆசிரியர்கள் 21.07.2026 ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களின் நகலுடன் பள்ளி நிர்வாகத்தை நேரில் தொடர்புகொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பள்ளி முகவரி

செயலாளர்

ஓருங்கிணைந்த அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி

முடிகொண்டான் – 609502

நன்னிலம் (தாலுகா)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.