நேரடி இரண்டாமாண்டு பி.இ., / பி.டெக்., பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை - 2026-27 - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 8, 2026

நேரடி இரண்டாமாண்டு பி.இ., / பி.டெக்., பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை - 2026-27 - விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2026



நேரடி இரண்டாமாண்டு பி.இ., / பி.டெக்., பொறியியல் பட்டப்படிப்பு சேர்க்கை 2026-27

விளம்பர அறிக்கை எண்: 17799/ ஜே3/2026

தகுதி வாய்ந்த பட்டயப்படிப்பு (Diploma) மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு இளநிலை பொறியியல் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணாக்கர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

> விண்ணப்பிக்கும் முறை: www.tnlea.com என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking ஆகிய முறைகளில் இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை 5 5 . "The Secretary, Second Year B.E. / B.Tech. Degree Admissions-2026-27, ACGCET, Karaikudi" payable at Karaikudi, 07.06.2026 அன்றிலிருந்து பெறப்பட்ட வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய:

ஆரம்ப நாள் 07.06.2026

இறுதி நாள் 07.07.2026

விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும், இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை (TFC) மையத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

>மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள "INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES"- .

>தொலைபேசி எண்: 04565-230801, 04565-224528

நேரடி 2-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பு: பாலிடெக்னிக் டிப்ளமா, பிஎஸ்சி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2026-27-ம் கல்வியாண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு (லேட்ரல் என்ட்ரி) தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு பாலிடெக்னிக் டிப்ளமா படித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் ஆன்லைனில் (www.tnlea.com) விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 7-ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

🎓 நேரடி இரண்டாம் ஆண்டு B.E./B.Tech. (Lateral Entry) சேர்க்கை 2026–27

தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (DOTE) 2026–27 கல்வியாண்டிற்கான நேரடி இரண்டாம் ஆண்டு B.E./B.Tech. சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. ✅ யார் விண்ணப்பிக்கலாம்?

டிப்ளமோ (Diploma) முடித்தவர்கள்

பி.எஸ்சி. (B.Sc.) முடித்தவர்கள்

✅ சேர்க்கை வழங்கப்படும் கல்லூரிகள்

அரசு பொறியியல் கல்லூரிகள்

அரசு உதவி பெறும் கல்லூரிகள்

அண்ணா பல்கலைக்கழகத் துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சுயநிதி பொறியியல் கல்லூரிகள்

🌐 விண்ணப்பிக்கும் இணையதளம்: www.tnlea.com

💰 விண்ணப்பக் கட்டணம்

OC / BC / BCM / MBC & DNC – ₹500

SC / SCA / ST – ₹250

📅 முக்கிய தேதிகள்

விண்ணப்பம் தொடக்கம்: 07.06.2026

விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.07.2026

📌 தேவையான சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் (TFC) மூலம் விண்ணப்பிக்கலாம்.

☎️ உதவி எண்கள்: 04565-230801, 04565-224528

👉 டிப்ளமோ அல்லது பி.எஸ்சி. முடித்து பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.