Teachers protest - ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 17, 2026

Teachers protest - ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை



ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கடந்த டிசம்பர் 26ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித் துறை மற்றும் காவல் துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இடைநிலை ஆசிரியர்களுடன் ஜனவரி 14ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஆசிரியர்கள் 23வது நாளாக சென்னை சைதாப்பேட்டையில் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் ஆசிரியர்களை கைது செய்து அருகே உள்ள மண்டபங்களில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். ‌

இதேபோல், பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகம் அருகில் 10வது நாளாக போராட்டம் நடந்தது. இதற்கிடையே பொங்கல் விடுமுறை முடிந்தபிறகு பள்ளிகள் மீண்டும் நாளை (ஜனவரி 19) திறக்கப்பட உள்ளன. இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும் என்பதால் ஆசிரியர்களின் போராட்டத்தை தமிழக அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.