ஜனவரி 2026 மாத சிறார் திரைப்படம் அயலி - பாகம் 1 திரையிடல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!
உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜனவரி மாதம் "அயலி பாகம் 1" திரைப்படத்தை திரையிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது 👇👇👇
உலகமெங்கும் திரைத்துறை வாயிலாக திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கங்களும், மாற்றங்களும் ஏராளம். திரைப்படங்களால் மாணவர்களுக்கு அறம் மற்றும் சமத்துவ கருத்துகள் பற்றின புரிதலை, கலந்துரையாடல்களின் வாயிலாக எளிதான வகையில் ஏற்படுத்திவிட முடியும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித்துறையின் முன்னெடுப்புகளில் அனைவராலும் பாராட்டப்பட்ட மிகவும் முக்கியமான நிகழ்வு சிறார் திரைப்படங்களை பள்ளிகளில் திரையிடுதல். மாணவர்களுக்கு சமூக நீதி, சமத்துவம், அறிவியல் பார்வை ஆகியவற்றைப் பற்றின விழிப்புணர்வு மற்றும் அதன் மீதான பார்வையை ஏற்படுத்துவதற்கும், மாணவர்கள் திரைப்படங்களை பகுத்தறிவுடன் அணுகுதல், தங்கள் வாழும் சூழலை புரிந்து கொள்ளுதல், பல்வேறு கலாச்சாரங்களின் தனித்தன்மையை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை, நட்பு பாராட்டுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், பாலின சமத்துவம் ஆகிய பண்பு நலன்களை அடையாளம் காணுதல், தங்களிடம் உள்ளார்ந்து புதைந்திருக்கும் படைப்பாற்றலை வெளிக்கொணர செய்தல் போன்ற நோக்கத்துடன் மாதந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரைப்படம் திரையிடப்படுகிறது.
மேலும் திரைப்படக் கலையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கலையை ரசிப்பதற்கும், கதை, எழுத்து, திரைக்கதை, நடிப்பு, உடையலங்காரம், பின்னணி வடிவமைப்பு, இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு. இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற போன்ற திரைத்துறையின் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் இந்நிகழ்வு அடிப்படையாக அமைகிறது.
அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் அனைவரும் கண்டுணரும் வகையில் ஜனவரி மாதம் "அயலி - பாகம் 1" திரைப்படத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது. . திரையிடக் படத்தின் கதைக் கரு, சுருக்கம், குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டியவை, உரையாடவேண்டியவை இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.
குறிப்பு:
அயலி திரைப்படம்- பாகம் 1 தலைமை ஆசிரியருக்கான EMIS உள்ளீட்டு தளத்தில், Club option-இல் உள்ள Children Movie Screening பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
EMIS HM Login Home → Clubs → Children Film Screening
திரையிடலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
1. திரையிடுவதற்கு முன்
இணைப்பு-1 இல் இணைக்கப்பட்டுள்ள படத்தின் புகைப்படத்தை திரைப்படம் திரையிடப்பட உள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் அறிவிப்புப் பலகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்.
திரையிடலுக்கான முன்னேற்பாடுகள் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கு அப்பள்ளியைச் சார்ந்த SMC முன்னாள் மாணவ உறுப்பினர்களில் ஒருவரைத் தலைமை ஆசிரியருடன் இணைத்துக் கொள்ளலாம்.
ஒருங்கிணைத்தலுக்கான SMC முன்னாள் மாணவ உறுப்பினர் பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதலின் படி திரையிடப்படவிருக்கும் படத்திற்கான முன்னேற்பாடுகளை செய்வர்.
பொறுப்பு ஆசிரியர் மற்றும் ஒருங்கிணைத்தலுக்கான பொறுப்பாளர்கள் திரையிடலுக்கு முன்பே படத்தைப் பார்த்து, படத்தின் கருப்பொருள், அதன் முக்கியத்துவம் போன்றவற்றை உணர்ந்து திரையிடலுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
திரையிடப்படவிருக்கும் படம் மற்றும் முன்னோட்ட காணொளியை திரையிட்டு பார்த்து அதன் திரையிடும் தரத்தை உறுதிப்படுத்திட வேண்டும்.
திரையிடலுக்குத் தேவையான அறை மற்றும் கருவிகளின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். திரையிடப்படும் அறை, திரையிடலுக்கு ஏதுவான ஒளி, ஒலி குறைவான, அமைதியான இடமாக இருக்க வேண்டும்.
திரையிடப்படும் அறை காற்றோட்டமான, சுகாதாரமான, பாதுகாப்பான இடமாகவும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
படம் பார்க்கும் மாணவர்களுக்குப் போதுமான இருக்கை, குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
திரையிடலின் போது
பொறுப்பு ஆசிரியர் மற்றும் SMC உறுப்பினர் திரையிடலுக்கு முன்பு படத்தின் கரு, அதன் பின்னணி, அதைத் திரையிடுவதற்கான காரணம் போன்றவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
* படத்தை திரையிடும் முன் திரைப்படத்தின் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்
முன்னோட்ட காணொளியை திரையிடப்படும் படம் தமிழ் அல்லாத பிறமொழியாக இருக்கும் வேளையில் அந்தப்படத்திற்கு நேரடி மற்றும் சுருக்கமான மொழிபெயர்ப்பைத் தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ, பள்ளி மேலாண்மைக் குழுவிலுள்ள முன்னாள் மாணவரோ அல்லது பொது முன்னாள் மாணவரோ அல்லது எல்லோரும் இணைந்தோ செய்ய வேண்டும்.
திரையிடப்படும் படத்தில் பணி புரிந்தவர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் பிற செய்திகளை எழுத்து வடிவில் வரும்போது அதை முழுமையாகப் பார்க்கும்படி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
குறிப்பாகப் படம் முழுமையாக முடியும் வரை விளக்குகளை அணைத்தே வைத்திருக்கவேண்டும்.
2. திரையிட்டபின் படத்தின் கதைக்கரு மற்றும் படத்திலிருந்து பெறப்பட்ட விவாதிக்க மாணவர்களுக்கு உரிய அனுபவத்தைப் பற்றிக் கலந்தாலோசித்து நேரம் கொடுக்கப்பட வேண்டும். படம் சார்ந்து இணைப்பில் பகிரப்பட்ட கலந்துரையாடலுக்கான தலைப்புகள் அல்லது கேள்விகள், மாணவர்களிடம் பகிரப்பட்டு உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். திரையிடலை ஒருங்கிணைக்கும் ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடலில் மாணவர்கள் கவனிக்கத் தவறிய கூறுகளை பகிரலாம்.
பங்கேற்று விளக்கங்களை, கலந்துரையாடலுக்கு உரிய முக்கியத்துவமும், போதுமான வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.