Proceedings of the Joint Director of School Education regarding student admissions in Model Schools! மாதிரிப் பள்ளிகளில் (Model Schools) மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
👇👇👇👇 பள்ளிக் கல்வி - மாதிரி பள்ளிகள் (Model Schools) - அரசு - நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை எதிர்வரும் கல்வி ஆண்டு 2026-27-இல் மாவட்ட மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க கோருவது - சார்பு.
1 G.O. (Ms.) No. 164, School Education (SSA1 ) Department, dated 29.11.2021.
2 G.O. (Ms.) No.138, School Education (SSA1) Department, dated 08.08.2022.
3 G.O. (Ms.) No.210, School Education (SSA1 ) Department, dated 18.11.2023.
4 தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலரின் கடிதம் 15.85.61600T:2524-1/C1/MS/2024, 31.12.2025. நாள்: எண்.
5 சென்னை 6. பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள், ந.க. 069824/பிடி2/இ2/2024, நாள் : 07.11.2024
பார்வை 4யில் காணும் கடிதத்தில் அரசாணை எண் 164/பள்ளிக் கல்வித் துறை, நாள் 29.11.2021ன்படி "அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக, சிறப்பு திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்படும்" என அறிவிக்கப்பட்டு அதனை செயல்படுத்தும் விதமாக அரியலூர், கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உண்டு, உறைவிட வசதியுடன் கூடிய 10 மாதிரிப் பள்ளிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 138/பள்ளிக் கல்வித் துறை, நாள் 08.08.2022ன்படி 2022 - 2023 -ஆம் கல்வியாண்டில் 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சென்னை, மதுரை, திருப்பத்துார், நீலகிரி, திருவாரூர், சிவகங்கை, ஈரோடு, இராமநாதபுரம், திருநெல்வேலி, கோயம்புத்துார், திருவள்ளுர், வேலுார், நாகப்பட்டினம், இராணிப்பேட்டை, தஞ்சாவூர் ஆகிய 15 மாவட்டங்களில் 15 மாதிரி பள்ளிகளும், சென்னை சைதாப்பேட்டையில் மாநில தகைசால் பள்ளியும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை எண் 210/பள்ளிக் கல்வித் துறை, நாள் 18.11.2023ன்படி 2023-24-ஆம் கல்வியாண்டில் 9 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை செங்கல்பட்டு. காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய 13 மாவட்டங்களில் மாதிரி மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டு தோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இந்த மாதிரிப் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் அதனை தொடர்ந்து எதிர்வரும் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை 10 ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி -2026 மாதம், 9 ஆம் வகுப்பு பிப்ரவரி -2026 மாதம் மற்றும் 11 ஆம் வகுப்பு மே -2026 மாதத்திலும் மாணவர் சேர்க்கை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் அனைத்துத் தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோரைக் கொண்டு இதற்கான முன்னோட்டக் கூட்டம் ஒன்றை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் (ஜனவரி 5 முதல் ஜனவரி 10-க்குள்) நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகியோர் மாதிரிப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து கண்காணித்து தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மாதிரிப் பள்ளிகளில் சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
3 பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் 2026-27-இல் மாதிரிப் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் சேர தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் பட்டியல் வெளியிடப்படும்.
4 அப்பட்டியல் வெளியான உடன் முதன்மை முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட ஆட்சியரை அணுகி, அவரின் ஒப்புதலைப் ஒப்புதலைப் பெற்று, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு கீழ்க்காணும் வகையில் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD DSE - Model School Admission PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.