TAPS - மாதாமாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை கைவிடுமாறு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, January 6, 2026

TAPS - மாதாமாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை கைவிடுமாறு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

an official letter from the Tamil Nadu High School - Higher Secondary School Graduate Teachers Association, registered as 758/2000. It expresses gratitude for the Honorable Chief Minister's pension-related announcements made on January 3, 2026, but also requests the withdrawal of a proposed 10% salary deduction.

The key points of the announcements welcomed by the association are:

50% of the last drawn salary will be provided as a pension for everyone retiring after 30 years of service.

Proportionate pensions will be given to those who served less than 30 years.

Dearness allowance hikes for pensioners will match those for teachers and government employees.

A gratuity of ₹25 lakhs will be provided upon retirement or death during service.

letter to the Chief Minister of Tamil Nadu, expressing appreciation for some government announcements regarding a contributory pension scheme but strongly opposing one specific decision.

The announcement to provide compassionate pension to those who retired under the Contributory Pension Scheme (CPS) until now is welcomed. The decision to continue the mandatory 10% monthly deduction from the salaries of currently working teachers and government employees is unacceptable.

The letter argues this specific decision contradicts previous promises and could tarnish the Chief Minister's reputation.

It respectfully requests the immediate withdrawal of the 10% deduction announcement and the swift implementation of the welcomed pension scheme as a government order.


TAPS - மாதாமாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை கைவிடுமாறு தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்புகளை வாழ்த்தி வரவேற்கிறோம்! மாதாமாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை கைவிடுமாறு வேண்டுகிறோம்!!

3.01.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஓய்வூதியம் பற்றி வெளியிட்ட முத்தாய்ப்பான அறிவிப்புக்களை தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நெஞ்சார வாழ்த்தி வரவேற்கிறோம். நன்றி பாராட்டுகிறோம்.

30 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் அனைவருக்கும் இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாக வழங்கப்படும் - என்ற அறிவிப்பு. 30 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கும், அவர்கள் பணியாற்றிய காலத்திற்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் - என்ற அறிவிப்பு.

ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் அதே அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் - என்ற அறிவிப்பு.

ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிட்டாலும் பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்கப்படும் - என்ற அறிவிப்பு

ஓய்வூதியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும் - என்ற அறிவிப்பு

ஓய்வு பெறுவதற்கு தற்போதுள்ள குறைந்த பட்ச பணிக்காலத்தை நிறைவு செய்யமுடியாமல் ஓய்வு பெறுபவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் - என்ற அறிவிப்பு

இதுநாள் வரை பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று செட்டில்பெண்ட் ஆனவர்களுக்கும் கருணை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்-என்ற அறிவிப்பு

இவைகள் அனைத்தும் மணியான அறிவிப்புகள்; அருமையான அறிவிப்புகள்: அற்புதமான அறிவிப்புகள்; பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரிய அறிவிப்புகள். ஆகவே இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமது அமைப்பின் சார்பில் மீண்டும் வாழ்த்தி பாராட்டி, நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் கீழ்காணும் இந்த அறிவிப்பை மட்டும் ஏற்க இயலாது என்பதால் அதை உடனடியாக கைவிடுமாறு கனிவுடன் மாண்புமிகு முதல்வரை நாம் வேண்டுகிறோம்.

தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோரின் ஊதியத்தில் மாதா மாதம் 10% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு வருவதில் எந்தவித மாற்றமும் இல்லை, தொடர்ந்து அவர்களின் ஊதியத்தில் மாதாமாதம் 10% ஊதியம் பணி ஓய்வு பெறும் வரை பிடித்தம் செய்யப்படும் என்ற மாண்புமிகு முதல்வரின் அறிவிப்பை ஒருபோதும் ஏற்க இயலாது.

நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிரான அறிவிப்பு இது என்பதையும், உங்களின் பேருக்கும், புகழுக்கும் நீங்கா களங்கத்தை ஏற்படுத்தக் கூடிய அறிவிப்பு என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

ஆகவே இந்த அறிவிப்பை உடனடியாக கைவிடுமாறும், அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்றை அரசாணையாக உடனடியாக வெளியிட்டு செயல்படுத்தி வேண்டுமெள நங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.