an official letter from the Tamil Nadu Secretariat Association to the Chief Minister of Tamil Nadu regarding the implementation of the Old Pension Scheme.
Sender: Tamil Nadu Secretariat Association, Chennai
Recipient: Honorable Chief Minister of Tamil Nadu, Chennai
Date: January 6, 2026
Subject: Implementation of the Old Pension Scheme Tamil Nadu Secretariat Association to the Chief Minister regarding the newly introduced Tamil Nadu Assured Pension Scheme.
The association views the current scheme as inadequate compared to the old pension plan and requests the inclusion of all features of the old plan.
The new scheme was announced by the Chief Minister on January 3, 2026.
The association believes the current scheme is a "sick child" when compared to the old one.
The primary request is for the government order to include all old pension scheme features.
One specific demand is the complete cancellation of the 10% salary deduction.
outlines several demands related to pension and provident fund schemes for employees.
The amount deducted so far should be converted to a General Provident Fund (GPF) account, similar to the old pension scheme.
The GPF amount, principal and interest, should be returned upon retirement.
A facility for temporary advance from the GPF should be provided.
Upon retirement, 15 years' worth of pension should be consolidated and provided.
தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்
தலைமைச் செயலகம், சென்னை-600 009.
பெறுநர்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,
தலைமைச் செயலகம்,
சென்னை- 600 009.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,
பொருள்
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் - பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இடம்பெற்ற அம்சங்கள் விடுபட்டது முழுமையாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நிறைவேற்றுதல் தொடர்பாக
வணக்கம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 03.01.2026 அன்று தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை அறிவித்தார்கள். 23 ஆண்டு கால ஓய்வூதியத்தினை பெறுவதற்கான போராட்டத்தில், உத்திரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் என்பது ஒரு மைல்கல் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் இதில் விடுபட்டுள்ளதை மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
நேற்று நடைபெற்ற சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தினைப் பொறுத்தவரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமானது அறிமுக நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சவலைக் குழந்தையாக இருப்பதாக தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கருதுகிறது.
எனவே, இதற்கு உரிய போஷாக்கினை அளித்து, அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போலவே, பின்வரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இதற்கான அரசாணையினை வெளியிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 1) ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகிதத் தொகையினை முற்றிலுமாக இரத்து செய்திட வேண்டும்.
2) இதுநாள்வரை பிடித்தம் செய்த தொகையினை பழைய ஓய்வூதியத் திட்டத்தினைப் போல் பொது வருங்கால வைப்பு நிதிக் கணக்காக மாற்றிட வேண்டும்.
3) பணி ஓய்வின்போது, பொது வருங்கால வைப்பு நிதித் தொகையினை அசலை வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும்.
4) பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறும் வசதியினை வழங்கிட வேண்டும்.
5) பணி ஓய்வு பெறும்போது, 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தினைத் தொகுத்து வழங்க வேண்டும்.
6) மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறும் பணியாளர்கள், அவர்து கணவன்-மனைவி-வாரிசுகள் இறக்க நேரிடும் நிகழ்வுகளில், அப்பணியாளரின் சேமிப்புத் தொகையானது வட்டியுடன் வாரிசுதாரருக்கு வழங்க வேண்டும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.