DSE procedures regarding the removal of pending audit objections in schools - பள்ளிகளில் நிலுவையில் உள்ள தணிக்கைத் தடைகள் நீக்கம் செய்தல் தொடர்பாக DSE செயல்முறைகள்!!!
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்
பள்ளிக் கல்வித் துறையில் ஜனவரி 2026-ல் மாவட்டம் வாரியாக தணிக்கை பிரிவு கண்காணிப்பாளர்கள் பள்ளிகளில் நிலுவையில் உள்ள அனைத்து தணிக்கை தடை சார்பான விவரங்களை நீக்கம் செய்து ஆணை வழங்க உரிய விவரங்களை சரிபார்த்து தொகுத்து நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரிடம் ஒப்படைக்கும் பொருட்டு இணை அமர்வு கூட்டம் 2026 ஜனவரி 08,09,12,13,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற உள்ள இணையமர்வு கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நிலுவையில் உள்ள அசுத்தணிக்கை தடை விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாக பெற்று தொகுத்து தயார் நிலையில் 07.01.2026-க்குள் வைத்திருக்குமாறும், மாவட்டத்தில் 08.01.2026 முதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ள இணையமர்வு கூட்டத்தில் தணிக்கை தடை நீக்கம் செய்வதற்கான பள்ளிகள் திட்டமிடப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2026 ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள இணையமர்வு கூட்டங்களில் பள்ளிக்கல்வி இயக்கக தணிக்கைப் பிரிவு கண்காணிப்பாளர்களுக்கு உரிய போதுமான இடவசதியுடன் கணினி தட்டச்சர், உதவியாளர் ஆகியோரை உடன் பணியமர்த்தி உடனுக்குடன் தடைநீக்க அறிக்கைகளை வழங்க ஏதுவாக ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் “இசலான் தொகை செலுத்தியது சார்பாக பணம் செலுத்தியுள்ள பள்ளியின் /தனியரின் பெயர் அடங்கிய முழுமையாக செலுத்து சீட்டு (Challan)-ல் "பேமெண்ட் சக்சஸ்" (Payment Success) ஆக உள்ளதா என சரிப்பார்த்து உரிய கணக்கீட்டுத் தாளுடன் ஒப்பிட்டு சரியான தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து" அதன் பிறகு தொகுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தடை நிவர்த்தி செய்ய கோரும் தணிக்கை தடை சார்பாக தணிக்கை அறிக்கையின் முகப்பு கடிதம் . தணிக்கை எழுப்பப்பட்ட பக்க நகல் மற்றும் வரிசை எண். 35,36 ή 37 (Covering letter of the Audit Report, Audit Objection page and Serial No.35,36
👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD DSE - Audit Joint Sitting - Jan 2026 Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.