A press release from the JACTO-GEO confederation in Chennai announces decisions regarding the new pension scheme introduced by the Tamil Nadu government.
The confederation has decided not to fully accept the new pension plan and will work to rectify its shortcomings.
Key features of the new plan include 50% pension for those with 30 years of service and a gratuity of ₹25 lakh.
A previously planned indefinite strike from January 6th has been withdrawn.
The group continues to demand the cancellation of the 10% monthly deduction, a refund of deducted amounts with interest, and a reduction in the service period required for a pension to 25 years.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைகளை சரிசெய்ய முடிவு - ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை தமிழக அரசின் புதிய ஓய்வூதி யத் திட்டத்தை முழுமையாக ஏற்கவில்லை. அதிலுள்ள குறை பாடுகளை சரிசெய்ய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்ட அறிக்கை: நமது 23 ஆண்டுகால போராட்டத் தின் பலனாக உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில், 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு 50% ஓய்வூதியம், பணிக்கொடை யாக ரூ.25 லட்சம் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது நமக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி.
இதனால் ஜாக்டோ- ஜியோ ஒருங் கிணைப்பாளர்கள் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், ஜன.6-ம் தேதி முதல்
திட்டமிடப்பட்ட காலைவரை யற்ற வேலைநிறுத்தமும் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அதேபோல், பழைய ஓய்வூ தியத்தில் இருந்த பல்வேறு சாதகமான அம்சங்கள், தற் போது புதிய திட்டத்திலும் உள்ளன. எனினும், இதை முழுமையான ஓய்வூதியமாக பார்க்கவில்லை. தற்போதைய திட்டத்தில் மாதம் 10% பிடித் தம் செய்தை ஏற்கவில்லை. இந்த இந்த முறையை முழுவதுமாக ரத்து செய்தல், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திரும்ப வழங்கு தல், ஓய்வூதியம் பெறுவ தற்கான பணிக்காலத்தை 25 ஆண்டுகளாக குறைக்க வும் தொடர்ந்து வலியுறுத் தப்படும். மேலும், மீதமுள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறை வேற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 6, 2026
New
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைகளை சரிசெய்ய முடிவு - ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு
JACTTO-GEO
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.