7,656 secondary school teachers will not participate in the protest that will begin on the 19th - Government School Teachers' Association announcement -
வரும் 19ம் தேதி முதல் நடக்கும் போராட்டத்தில்
7,656 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை யில் வரும் 19ம் தேதி முதல் நடக்கும் தொடர் போராட் டத்தில், 7,656 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முனீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் எஸ்எஸ் டி.ஏ என்ற ஆசிரியர் சங்கத் தின் மூலம், 01.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள், ஊதியப் பிரச்சினை சார்ந்து வரும் 19ம் தேதி முதல் சென் னையில் தொடர் போராட் டம் நடத்த இருப்பதாகவும், இதில் 01.06.2009க்குப் பிறகு பணியில் சேர்ந்த 20,416 இடைநிலை ஆசிரியர்களும் பங்கேற்க இருப்பதாகவும் வாட்ஸ்-அப் மூலம் தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு
தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மறுப்பு தெரிவிக்கிறது. அதாவது சம் பந்தப்பட்ட எஸ்எஸ்டிஏ என்ற சங்கம், 01.06.2009க்கு பிறகு பணியில் சேர்ந்த 20,416 இடைநிலை ஆசிரி யர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அமைப்பு அல்ல. இந்த 20,416 ஆசிரியர்களும் தமிழ்நாட்டிலுள்ள வெவ் வேறு சங்கங்களிலும் பய ணித்து வருகின்றனர்.
குறிப்பாக, இவர்களில் 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த 7,656 ஆசிரியர்கள், உண்மையான நிர்வாகதாம தத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன் றிணைந்து, தமிழ்நாடு அர சுப்பள்ளி ஆசிரியர்கள் சங் கம் மற்றும் 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த 7,000 இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புக்குழுவில் பய ணித்து வருகின்றனர்.
இந்த 7,656 ஆசிரியர்களுக்கும் நிர் வாக தாமதத்தால் ஏற்பட்ட
பாதிப்பு நிச்சயம் சரிசெய் யப்படும் என்று தொடர்ந்து உறுதியளித்து வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மீதும், தமிழ்நாடு முதலமைச் சர் மீதும் நம்பிக்கை வைத்த தன் அடிப்படையில், 2009ம் ஆண்டு நியமனம் பெற்ற 7,656 இடைநிலை ஆசிரியர் களுக்கும் மிக விரைவில் தீர்வு கிடைக்க இருக்கிறது.
எனவே, 2009 ஆண்டு பணியில் சேர்ந்த 7,656 இடைநிலை ஆசி ரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை, அனை வருக் குமான பாதிப்பு என திசை திருப்பும் வகையில், எஸ்எஸ்டிஏ சங்கம் வரும் 19ம் தேதி முதல் நடத்தும் தொடர் போராட்டத்தில், 2009ம் ஆண்டு பணியில் சேர்ந்த 7,656 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க வில்லை என்பதை அர சுக்கும், கல்வித்துறைக்கும் தெரிவித்துக் கொள்கி றோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sunday, January 18, 2026
New
வரும் 19ம் தேதி முதல் நடக்கும் போராட்டத்தில் 7,656 இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்க மாட்டார்கள் - அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.