ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2026 -
Applications are invited for 22,000 vacancies in the railways! - Last date to apply: 20.2.2026
ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22 ஆயிரம் குரூப் 'டி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிபப்பு
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22 ஆயிரம் குரூப் 'டி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து 2026 பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: குரூப் 'டி' (நிலை 1)
காலியிடங்கள்: 22,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ முடித்து (என்சிவிடி, எஸ்சிவிடி) அல்லது என்சிவிடியால் வழங்கப்படும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, உடற் தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளி, திருநங்கைகள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.rrbapply.gov.in, https://www.rrbchennai.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.1.2026 முதல் 20.2.2026 இரவு 11.59 மணி வரை
Wednesday, January 7, 2026
New
ரயில்வேயில் 22 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.2.2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.