ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் - TNPTA கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, December 27, 2025

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் - TNPTA கோரிக்கை



*TNPTA கோரிக்கை*

➖➖➖➖➖➖➖➖

*ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்...*

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கு வணக்கம்....

தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும் என 311-ஆவது வாக்குறுதியில் உறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும் அதனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதே இடைநிலை ஆசிரியர்களைத் தொடர் போராட்டம் நடத்தும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி வளாகத்தை முற்றுகையிட முயன்ற 2009க்குப் பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதும், அவர்களை பேருந்துகளில் அலைகழிப்பதும் மிகுந்த வருத்தத்திற்கு உரியது என்பதை சுட்டிக்காட்டி அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதைக் கைவிட்டு, அவர்களை அழைத்துப் பேசி - தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக சங்கங்கள் அனைத்தும் தொடர்ந்து ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி வரும் நிலையில் - அறவழியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைப்பதும் அரசு நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் – ஊதிய முரண்பாடுகள் களைய தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முன்பு TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கடந்த 08.11.2023 அன்று அளித்த கருத்துரையின் அடிப்படையில் – இனியும் கால தாமதம் செய்யாமல் அந்த குழுவின் அறிக்கையினை விரைந்து பெற்று - 2009க்குப் பின் நியமனம் பெற்ற அனைத்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைந்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என்று TNPTA-தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தங்கள் தோழமையுடன்,

(L.மணி)

மாநில பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.