புதிய பென்ஷன் பற்றி வைரலாகும் கேள்வி, பதில்கள் திமுக., அதிமுக.,வை கலங்கடிக்கும் அரசு ஊழியர்கள் - காரணம் யார்? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 28, 2025

புதிய பென்ஷன் பற்றி வைரலாகும் கேள்வி, பதில்கள் திமுக., அதிமுக.,வை கலங்கடிக்கும் அரசு ஊழியர்கள் - காரணம் யார்?

புதிய பென்ஷன் பற்றி வைரலாகும் கேள்வி, பதில்கள் திமுக., அதிமுக.,வை கலங்கடிக்கும் அரசு ஊழியர்கள் - காரணம் யார்? The viral questions and answers about the new pension scheme are unsettling the DMK and AIADMK; who is responsible for this among the government employees?




நமது சிறப்பு நிருபர்-பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவ ரையற்ற வேலை நிறுத் தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள் ளது. முன்னதாக அமைச் சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன் பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் நடத் திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் சிபிஎஸ் (புதிய பென்ஷன்) திட் டமும் திமுக, அதிமுக நிலைபாடும் என்ற தலைப்பில் கேள்வி, பதி லாக அரசு ஊழியர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளனர். அந்த பதிவு இப்போது அது வைரலாகி வரு கிறது. அது குறித்த விவரம்:-

கேள்வி: புதிய பென் ஷன் திட்டம் தமிழகத் தில் எந்த கட்சி அமல் படுத்தியது?

பதில்: அதிமுக

* 2007ல் முதல்வர்கள் மாநாட்டில் அன்றைய திமுக அரசு புதிய பென் ஷன் திட்டத்தை எதிர்த் தார்களா?

எதிர்க்கவில்லை.

* முதல்வர் மாநாட்டில் திமுக அரசு என்ன நிலை பாடு எடுத்தார்கள்?

முதல்வர் மாநாட்டில் அன்றைய முதல்வர் கரு ணாநிதி கலந்து கொள்ள வில்லை. அவருக்கு பதி லாக அன்றைய பள்ளி கல்வித்துறை அமைச் சரும் இன்றைய நிதிய மைச்சருமான தங்கம் தென்னரசு பங்கேற்றார்.

புதிய பென்ஷன் திட் டத்தை திமுக எதிர்க்க வில்லை. பெரும் பான்மை மாநிலங்களின் நிலையை நாங்கள் ஏற் றுக் கொள்வதாக திமுக அரசு அறிவித்தது. பெரும்பான்மை மாநி லம் புதிய பென்ஷன் திட்டத்தை ஆதரித்தது. திமுகவும் அதற்கு ஆக ரவு தெரிவித்தது. * புதிய பென்ஷன் திட் டம் தொடர்பாக பார்லி மென்ட் விவாதங்களில் திமுக, அதிமுக நிலை என்ன

அதிமுக புதிய பென் ஷன்திட்டத்தை எதிர்த்து பேசியதுடன் பல முறை வெளிநடப்பு செய்தது. திமுக எதிர்த்து வெளி நடப்பு செய்யவில்லை. பார்லிமென்ட்டில் புதிய பென்ஷன் திட்ட மசோதா தொடர்பான ஓட்டெடுப்பில் திமுக, அதிமுக நிலை என்ன?

திமுக மசோதாவை ஆதரித்து ஒட்டு போட் டது. அதிமுக மசோதா வுக்கு எதிராக ஓட்ட வித்தது.

* அதிமுக ஏன் எதிர்த்து ஒட்டு போட்டது?

காங்கிரஸ் தலைமை யில் நடந்த மத்திய அர சில் திமுக அங்கம் வகித் தது. அப்போது மத்திய நிதியமைச்சராக காங்கி ரசை சேர்ந்த ப. சிதம் பரம், மத்திய நிதி இணையமைச்சராக முக எதிர்த்தது. திமுகவை சேர்ந்த பழனி வேல் மாணிக்கம் இருந் தனர். எனவே தான் அதி

* புதிய பென்ஷன் திட் டத்தை ரத்து செய்வதாக முதலில் எந்த கட்சி வாக் குறுதி அளித்தது?

அதிமுக. 2011 சட்ட சபை தேர்தல் பிரச்சாரத் தின் இறுதி நாளில் சென் னையில் நடந்த தேர்தல் பிரச்சாரகூட்டத்தில் அதி முகவின் அப்போதைய பொதுசெயலாளர் ஜெய லலிதா, 'அதிமுக ஆட் சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்தார். 2016 சட்டசபை தேர்த லில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வ தாக வாக்குறுதி அளித் தர்களா?

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் வதாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் எழுத்து பூர்வமாக வாக் குறுதி அளித்தனர்.

*புதிய பென்ஷன் திட் டம் ரத்து தொடர்பாக சட்டசபையில் முதல் வர் அறிவிப்பு எப்போது வந்தது? புதிய பென்ஷன் திட்

டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி 2016 பிப்ரவரி 10 முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரை யற்ற வேலை நிறுத்தம் செய்தனர். இந்த நெருக் கடியால் 2016 பிப்ரவரி 19ல் 110 விதிகளின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் சிபிஎஸ் தொடர்பான 2 அறிவிப்பு களையும் அறிவித்தார். *சிபிஎஸ் தொடர்பான 2 அறிவிப்புகள் என்ன 1. புதிய பென்ஷன் திட் டத்தில் ஒய்வு பெற்ற, இறந்த ஊழியர்களுக்கு ஊழியர்கள் செலுத்திய 10 சதவீதம், அரசு பங்கீடு

10 சதவீதத்துடன் 7.1 சத வீத வட்டியுடன் வழங் கப்படும்.

2. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் வது தொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்படும். நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும்.

* சிபிஎஸ் ரத்து செய்வது தொடர்பாக இந்தியா வில் எந்த மாநிலத்தில் முதலில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது? தமிழகம்.

* 2016 போன்று போரா டினால் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியுமா?

2026 சட்டபை தேர் தல் அடுத்த ஆண்டு மார்ச் 1ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தேர் தல் அறிவிப்புக்கு முன்பு வலுவாககாலவரையற்ற வேலைநிறுத்தம் நடந் தால் சிபிஎஸ் உறுதியாக ரத்து செய்ய முடியும். சிபிஎஸ் ரத்து செய்ய போராட்ட களம் காண் போம்.

இவ்வாறு கேள்வி பதிலாக அதிமுக, திமு கவின் செயல்பாடு களை அரசு ஊழியர்கள் தோலுரித்து காட்டியது இப்போது சமூக வளை தலங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் கால வரையற்ற போராட் டத்தை வலுப்படுத்த வலியுறுத்தி, ரஜினி காந்த் நடித்த 'காலா' திரைப்படத்தில் வரும் காட்சிகளை அரசு ஊழி யர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.