தட்கல் (TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31.12.2025 வரை நீட்டிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 21, 2025

தட்கல் (TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31.12.2025 வரை நீட்டிப்பு

The Tamil Nadu Generation and Distribution Corporation (TANGEDCO) has extended the application deadline for the Tatkal (TATKAL) scheme for agricultural electricity connections.

The deadline for submitting applications has been extended to December 31, 2025.

The scheme aims to enhance agricultural production and improve farmers' livelihoods.

Both "Ready Parties" and farmers applying under the new self-financing schemes (TATKAL & RSFS) will benefit.

The extension addresses technical challenges and time constraints faced by farmers during the online application process.

Agri Current - தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற 31.12.2025 வரை வாய்ப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம்

தட்கல் (TATKAL) திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் 31.12.2025 வரை நீட்டிப்பு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி. வேளாண் உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2025-26 ஆம் நிதியாண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் புதிய விவசாய மின் இணைப்புகளை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே தயார் நிலையில் உள்ள விண்ணப்பதாரர்கள் (Ready Parties), அரசு சிறப்புத் திட்டங்கள் மற்றும் புதிய சுயநிதித் திட்டங்களின் (TATKAL & Revised Self Financing Scheme (RSFS)) கீழ் விண்ணப்பித்த விவசாயிகள் பயன்பெறுவர். இந்நிலையில், தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் (TATKAL) கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏற்பட்ட தொழில்நுட்ப சவால்கள் கால அவகாசம் இல்லாமை காரணமா விண்ணப்பிக்க விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் மற்றும் போதிய இயலவில்லை அடிப்படையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தட்கல் விவசாய மின் இணைப்புத் திட்டத்தின் (TATKAL) கீழ் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும், இந்த காலக்கட்டத்திற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசு வழங்கும் வழிகாட்டுதலும் மற்றும் ஒதுக்கீடு அளவிற்கும் ஏற்ப தட்கல் திட்டத்தின் கீழ் படிப்படியாக விவசாய மின் இணைப்புகள் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.