ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT Proceedingsள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 24, 2025

ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT Proceedingsள்

an official directive regarding an English graduate teacher training workshop for the academic year 2025-2026.

It outlines the responsibilities of District Institute of Education and Training (DIET) principals and Chief Educational Officers in selecting participants and managing expenses.

Principals are instructed to make advance arrangements for the training at the selected center.

Teachers for grades 6 to 10 English curriculum must be selected by DIET principals and Chief Educational Officers.

Senior lecturers, lecturers, and block resource teacher educators are to participate as resource persons.

Participants are required to bring English textbooks for grades 6 to 10 to the workshop.



ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Skill development training for English graduate teachers - Proceedings of the Director of School Education.

மேற்படி உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தெரிவு செய்யப்பட்ட பயிற்சி மையத்தில் உரிய நாளில் பயிற்சியினை மேற்கொள்ளும் வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேற்படி பணிமனையில் இந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் தங்களது மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களை (பங்கேற்பாளர்களை) தங்களது மாவட்ட முதன்மை கல்வி அலுவலருடன் இணைந்து ஆசிரியர்களை தெரிவு செய்து பயிற்சியினை மேற்கொள்ளும் வகையில் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இப்பயிற்சியில் இந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் ஆங்கில பாட முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களை (இணைப்பில் உள்ளவாறு) கருத்தாளர்களாக பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் உரிய நாள்களில் பங்குபெற எதுவாக பணிவிடுவிப்பு செய்யுமாறும் தொடர்புடைய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இப்பணிமனைக்கான செலவினத்தினை உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 2026 2026 ஆம் கல்வி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடு (Budget Estimate) 2202-02-004-JJ-37201 வகையில் தற்காலிக முன்பணமாக பெற்று இணைப்பில் உத்தேச செலவின விவரத்தினை பின்பற்றி அரசாணையின்படி பயிற்சியினை நடத்திடுமாறு சார்ந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வருக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இப்பயிற்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களை 6 முதல் 10 வகுப்புகளுக்கான ஆங்கில பாட புத்தகத்தினை உடன் கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.