மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகம் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ / மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 23, 2025

மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகம் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ / மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...



மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகம் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ / மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... Proceedings of the Director of Elementary Education regarding providing instructions on receiving and safely storing the textbooks and notebooks for the third term at the distribution centers and distributing them to the students...

விலையில்லா நலத்திட்டங்கள் - அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு மூன்றாம் பருவத்திற்கான பாடநூல்கள் மற்றும் நோட்டுப்புத்தகம் பெற்று விநியோக மையங்களில் பாதுகாப்பாக வைப்பது மற்றும் மாணவ / மாணவியருக்கு வழங்குவது குறித்து அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...

நோட்டுப்புத்தகங்களை 2025-26ஆம் கல்வியாண்டில் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கும்போது, வழங்கப்பட்ட விவரத்தினை வழங்கல் பதிவேட்டில் (Distribution Register) பதிவு செய்ய வேண்டும். விநியோக மையங்களிலிருந்து சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும்போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை இப்பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. * மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) தங்களின் ஆளுகைக்குட்பட்ட ஒன்றியங்களுக்கு தேவையான அளவில் பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் பெறவில்லை எனில், கல்வி மாவட்டத்திலுள்ள மற்ற ஒன்றியங்களில் ஏதேனும் கூடுதலாக பொருட்கள் பெற்று இருப்பின் அவற்றை மீள பெற்று தேவையான பள்ளிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். இந்நடவடிக்கை மேற்கொண்ட பின்பும் தேவை இருப்பின் இவ்வியக்கக இணை இயக்குநர் (உதவிபெறும் பள்ளிகள்) மின்னஞ்சல் deejdaided@gmail.com மற்றும் “கே" பிரிவு மின்னஞ்சல் deeksection.tn@gmail.com முகவரிக்கு தெரிவிக்க வேண்டும்.

2025-26ஆம் கல்வியாண்டில் மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் மாணவ / மாணவியருக்கு வழங்கப்படும் எண்ணிக்கை விவரத்தினை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். தொடக்கக் கல்வி இயக்கக நிருவாகத்தின் கீழ் செயல்படும் அரசு / அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியருக்கு அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளன்றே பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD 2025-26- 3rd term - Text Book & Noter book distribution PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.