நீட்’ல் ஒரு நிலைப்பாடு; 'டெட்'ல் ஒரு நிலைப்பாடு - தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 17, 2025

நீட்’ல் ஒரு நிலைப்பாடு; 'டெட்'ல் ஒரு நிலைப்பாடு - தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தி



நீட்’ல் ஒரு நிலைப்பாடு; 'டெட்'ல் ஒரு நிலைப்பாடு - தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டால் அதிருப்தி

One stance on NEET; another stance on TET - dissatisfaction due to the Tamil Nadu government's double standards.

தமிழகத்தில் நீட் தேர் வில் ஒரு நிலைப்பாடும், டெட் தேர்வில் ஒரு நிலைப்பாடும் கொண் டுள்ள தி.மு.க., அரசு மீது ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மருத்துவ படிப்புகளுக் கான நீட் நுழைவுத் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என தி.மு.க.. அரசு எதிர்த்து வருகிறது. அத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண் டும் என வலியுறுத்தியும் மத்திய அரசு அதை ஏற்க வில்லை. விலக்கு கேட்டு தமிழக அரசு தொடர்ந்த வழக்கிலும் உச்சநீதிமன் றம் மறுத்து விட்டது. இந்நிலையில் 2021 சட் டசபை தேர்தலில், ஆட் சிக்கு வந்தவுடன் தீட் 5 நுழைவுத் தேர்வு தமிழகத் தில் ரத்து செய்யப்படும்

என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. நான்கரை ஆண் டுகள் சென்று விட்டன. இன்னும் நிறைவேற்றும் சூழ்நிலை இல்லை.

ஆனால் ஆசிரியர் தகு தித் தேர்வு (டெட்) விஷ யத்தில் தி.மு.க., அரசின் நிலைப்பாடு முற்றிலும் முரணாக உள்ளது. மத் திய அரசின் உத்தரவை பின்பற்றி தமிழகத்தில் எட் டாம் வகுப்பு வரை ஆசி ரியர்கள் நியமனத்திற்கு தகுதியாகவும், ஒன்பது, பத்தாம் வகுப்பு களுக்கு போட்டித் தேர்வு நடைமுறை குறித்தும் தமி முக அரசு உத்தரவு பிறப்பித் 'டெட்' தது.

2018 முதல் ஆசிரியர் நியமனங்களுக்கு 'டெட்', போட்டித் தேர்வு என இரண்டு தேர்வுகளை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

அதே 2021 தேர்தல் வாக்குறுதியில், இந்த இரண்டு தேர்வுகள் என் பதை ஒன்றாக குறைத்து ஆசிரியர் நியமனம் மேற் கொள்ளப்படும்' என்ற தி.மு.க., அளித்த வாக்குறு தியையும் இதுவரை நிறை வேற்றவில்லை.

3 லட்சம் ஆசிரியர் பாதிப்பு

சமீபத்தில் 2012க்கு முன் பணி நியமனமான அனைவருக்கும் டெட்' கட்டாயம் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் பணியில் உள்ள 3 லட்சம் ஆசிரி யர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களையும் பாதுகாக்க அரசு முறை யான நடவடிக்கை எடுக் கவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் பாதுகாப்பு கூட்டியக்கம் (ஜாக்பாட்) மாநில ஒருங்கிணைப்பா ளர் ஆரோக்கியதாஸ் கூறிய தாவது: 'சாதகமான முடிவு என்றால் அது எங்களால் தாள் கிடைந்தது எனவும், பாதகமான முடிவு வந்தால் அதற்கு மத்திய அரசு தான் காரணம் எனமாதில அரசு நான்கரை ஆண்டுகளாக தமிழக மக்களிடம் அரசி யல் செய்துவருகிறது. பற்றவில்லை. நீட் தேர் வுக்கு தெரிவிக்கும் தமிழக மத்திய அரசின் புதியக் கல்விக்கொள்கை அடிப்ப டையில் சம் வகுப்புக்கு ஆல் பாஸ் இல்லை என மத்திய அரசு அமல்படுத்த உத்தரவிட்டது.

ஆனால் அதை தமிழக அரசு பின் அரசின் எதிர்ப்பு, டெட் தேர்வு வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இல்லை. தமிழக அரசு நினைத்திருந் தால் 'டெட்' கட்டாயம் என்பதால் பாதிக்கப்படும் 3 லட்சம் ஆசிரியர்களை பாதுகாக்கும் வகையில், சட்டசபையில் டெட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருக்கலாம்.

ஆனால் அந்த தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் சிறப்பு டெட் தேர்வு நடத்த உத்தரவு பிறப்பித்து, அனு பலம் வாய்ந்த மூத்த ஆசி ரியர்களை மனஉளைச் சலுக்கு தமிழக அரசு தள்ளியுள்ளது. இது மாண வர் கல்வி நலனை பாதிக் கும் வகையில் தி.மு.க.. அரசால் எடுக்கப்பட்ட தவ றான முடிவாகவே தெரி கிறது என்றார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.