விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 17, 2025

விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!



விடுமுறை நாட்களில் NSS சிறப்பு முகாம் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! The Director of School Education has issued an order granting compensatory leave to teachers who worked during the NSS special camp on holidays!

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் பணியாற்றியமைக்காக ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது . பள்ளிக் கல்வி நாட்டு நலப்பணித்திட்டம் 2025-2026ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணித்திட்ட அலகுகள் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையில் 7 நாட்கள் நடைபெறும் மாணவர்களுக்கான சிறப்பு முகாமில் அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்களும் ( DLO's ) மற்றும் திட்ட அலுவலர்கள் ( PO's ) இவ்விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக ஆறு நாட்கள் வருகைபுரிந்து பணியாற்றிருந்தால் மட்டும் ஈடு செய்யும் விடுப்பு அனுமதிக்கலாம். மேலும் இவ்விடுப்பினை மொத்தமாக எடுக்காமல் அவ்வப்போது ஒரு நாள் வீதம் விதிகளின்படி 6 மாத கால அவகாசத்திற்குள் எடுக்க வேண்டுமென்றும் இது சார்ந்த ஈடுசெய் விடுப்பு ஏற்கனவே துய்க்கப்பட்டிருந்தால் அவ்விடுப்பு போக மீதமுள்ள நாட்களுக்கு மட்டும் விடுப்பு வழங்குமாறும் , அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.