தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 23.12.2025 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 24, 2025

தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் 23.12.2025



தருமபுரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவள்ளுவராண்டு 2056/விசுவாசு / கார்த்திகை 08 ந.க.எண்.0423/அ0/2025. நாள் 23.12.2025 பொருள்



பள்ளிக்கல்வி -அரையாண்டு தேர்வுக்கு பிறகு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்த்தல் -மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறை கழித்தல் பெற்றோர் மற்லும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் - தொடர்பாக.

பார்வை பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடித ந.க.எண்.0035/DSE/PC/2025 22:12:2025

அரையாண்டு தேர்வு விடுமுறை - பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல் Half-yearly exam holidays - Important instructions from the School Education Department to parents:

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24.12.2025 ( புதன் கிழமை ) முதல் 04.01.2026 ( ஞாயிற்றுக் கிழமை ) வரை விடுமுறை அளிக்கப்பட்டு , 05.01.2026 திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதாகவும் , அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து கீழ் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. * மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல் , ஆறு , ஏரி , குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம் .

• மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம் . இசை , நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் வாய்ப்பு ஏற்படுத்தி வேண்டும் .

* தாத்தா , பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும் . பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்கப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை, அரையாண்டுத் தேர்வு விடுமுறையை முன்னிட்டு மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களுக்கு வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள் இதோ: சிறப்பு வகுப்புகள் தடை:

அரையாண்டு விடுமுறை நாட்களில் (டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவிதமான சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செய்திகள்.

சுற்றுலா மற்றும் பாதுகாப்பு:

விடுமுறை காலத்தில் குழந்தைகளைச் சுற்றுலா அழைத்துச் செல்லும் போது நீர்நிலைகள் மற்றும் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

வாசிப்புப் பழக்கம்:

மாணவர்கள் விடுமுறை நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க, அருகில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்துச் சென்று வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திறன் மேம்பாடு:

மொபைல் போன் மற்றும் திரைப் பயன்பாட்டைக் குறைத்து, மாணவர்களின் தனித்திறன்களை (ஓவியம், இசை, விளையாட்டு) வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டும்.

பள்ளி திறப்பு:

விடுமுறை முடிந்து அனைத்துப் பள்ளிகளும் ஜனவரி 2, 2026 அன்று மீண்டும் திறக்கப்படும். அன்று மாணவர்கள் அனைவரும் முறையாகப் பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி சார்ந்த கூடுதல் தகவல்களை EMIS இணையதளத்தின் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.