Higher Sec HM பணிவரன்முறை செய்ய, கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் - DSE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 24, 2025

Higher Sec HM பணிவரன்முறை செய்ய, கருத்துருக்கள் அனுப்பக் கோருதல் - DSE Proceedings



The Director of School Education has issued an order requesting proposals for the regularization of services of higher secondary school headmasters.- மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய, கருத்துருக்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

CLICK HERE TO DOWNLOAD DSE - HSS Hms Regularisation PDF

an official proceeding from the Director of School Education, Chennai, dated December 8, 2025. It concerns the regularization of service for headmasters promoted in 2023 and 2024, requesting relevant proposals from districts.

Subject: Requesting proposals from districts to regularize the service of headmasters promoted as of 01.01.2023 and 01.01.2024.

References: Proceedings from the Commissioner of School Education dated August 18, 2023, and July 20, 2024.

Action Taken: Promotions were granted to postgraduate teachers and high school headmasters based on seniority lists through counseling sessions on the dates mentioned above.

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.

ந.க.எண்.65810/டபிள்யு1/இ1/2025

பொருள் :

தமிழ்நாடு மேல்நிலைக் கல்வி பள்ளித் தலைமையாசிரியர்கள் - நாள்(8.12.2025 அரசு/நகராட்சி மேல்நிலைப் 01.01.2023 மற்றும் 01.01.2024 நிலவரப்படி பதவி உயர்வு வழங்கப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்ய உரிய மாவட்டத்திலிருந்து கருத்துருக்கள் கோருதல் - தொடர்பாக.

பார்வை:

1. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,

ந.க.எண்.39620/டபிள்யு.1/இ1/2023 நாள்.18.08.2023

2. தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்,

ந.க.எண்.26057/டபிள்யு.1/இ1/2024 நாள்.20.07.2024. பார்வையில் காணும் செயல்முறையின்படி, மேல்நிலைக் கல்விப் பணியில் 01.01.2023 மற்றும் 01.01.2024 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சிப் பட்டியலில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலமாக 18.08.2023 மற்றும் 20.07.2024 ஆகிய நாட்களில் அரசு/ நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு

வழங்கப்பட்டுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தனித்தனியாக ஆணை வழங்காமல் ஒரே செயல்முறைகளின் வாயிலாக பணிவரன்முறை செய்ய கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.

> மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணிவரன்முறை செய்ய இரண்டு ஆண்டுக்கான கருத்துருவினை முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் முழுமையாக சரிபார்த்து இவ்வியக்ககத்தின் மூலம் அனுப்பப்பட்டுள்ள Excel படிவத்தில் (Annexure-I & II) மருதம் Font இல் முழுமையாக பூர்த்தி செய்து ஆண்டு வாரியாக கவனத்துடன் சரிபார்த்து அனுப்பப்படல் வேண்டும்.

> முதன்மைக் கல்வி அலுவலரால் சரிபார்க்க வேண்டிய விவரங்கள் :

1) ஆசிரியரின் விண்ணப்பம், பணிவரன்முறை படிவம்.

2) முதன் முதலில் பணியில் சேர்ந்த பணி நியமன ஆணை நகல்

3) முதுகலை ஆசிரியர் நிலையில் பணிவரன்முறை ஆணை நகல்

4) தகுதிகாண் பருவம் ஆணை நகல்.

5) பணிப்பதிவேடு முதல் பக்கம் நகல்,

6) தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆணை நகல் மற்றும் பணியில் சேர்ந்த விவரம் பணிப்பதிவேடு பக்கம் நகல்,

7) அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் உண்மைத் தன்மை நகல்

8) துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்ற விவரம் மற்றும் Bulletin No. நகல். > மேலும் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு மூலம் பணியில் சேர்ந்தவர்களின் பணிவரன்முறை கருத்துரு முழுமையாகவும், ஒட்டுமொத்தமாகவும் (Consolidate Proposal) தயார் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே பரிசீலனை செய்து இணைக்கப்பட்டுள்ள படிவத்தினை முழுமையாகவும் திருத்தமின்றியும் (Ex. முற்பகல்/பிற்பகல்) அனுப்பப்படல் வேண்டும்.

> இக்கருத்துருவில் எவரது பெயரும் விடுபடவில்லை என்பதற்கும் முழுமையாக உள்ளது என்பதற்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சான்று அளிக்க வேண்டும். > இக்கருத்துருவில் 18.08.2023 மற்றும் 20.07.2024 ஆகிய நாட்களில் பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பெயர் ஏதேனும் விடுபட்டால் அதற்கான முழு பொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க வேண்டும். > எக்காரணம் கொண்டும் அரசு மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிவரன்முறை கருத்துரு தனித்தனியாக அனுப்ப கூடாது.

> மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இணைப்பில் உள்ள Excel (Annexure-I & II) படிவத்தில் மருதம் Font இல் முழுமையாக பூர்த்தி செய்து 09.01.2026 முன்னதாக இவ்வியக்கக W1 பிரிவு மின்னஞ்சல் w1dsetn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலரால் பூர்த்தி செய்யப்பட்ட Excel படிவத்தில் கையொப்பமிடப்பட்ட பிரதியினை (Excel படிவம்) உரிய இணைப்புகளுடன் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) பெயரிட்ட உறையில் அனுப்ப வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு: Excel படிவம் (Annexure-I & II)

CLICK HERE TO DOWNLOAD DSE - HSS Hms Regularisation PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.