உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, December 23, 2025

உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு!



உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! Announcement regarding the general transfer counselling for higher education department teachers/employees!

உயர் கல்வித் துறை ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு! உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை , அறிவியல் , கல்வியியல் , பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு ( General Counselling ) இணையவழியில் நாளை ( 24.12.2025 ) முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது : - அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை. அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள். நூலகர்கள். உடற்கல்வி இயக்குநர்கள். தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு பணியிடமாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) वा (24.12.2025) ( 05.01.2026 ισως இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இந்த பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in στό ω . தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

an announcement from the Tamil Nadu Higher Education Department regarding the general counseling for transfers for the 2025-26 academic year. Applications are open for staff in government arts, science, education, engineering, and polytechnic colleges.

The application window is from December 24, 2025, to January 5, 2026. Applications must be submitted online through specific websites depending on the directorate. The announcement was made by the Honorable Minister for Higher Education. CLICK HERE TO DOWNLOAD Press Release 3059 - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.