2025-26 மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியல் - Publication of the list of Head Teachers eligible for promotion to the post of District Education Officer 2025-26
தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி விதிகளில் வகுப்பு-IVஇன் கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2025-20 ஆம் ஆண்டுக்குரிய காலிப்பணியிட மதிப்பீடு நிர்ணயம் செய்ய கருத்துருக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு அரசளவில் ஆணைகள் எதிர்நோக்கப்படுகிறது.
இவ்வகையில் பதவி உயர்வு / பணிமாறுதல் மூலம் 2025-2020 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு நியமனம் செய்ய தகுதி படைத்த அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களின் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் தயார் செய்யும் பொருட்டு 01.01.2025 தேதியில் தகுதிபடைத்த அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் இத்துடன் இணைத்து, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது.
இணைப்பு 1 மற்றும் 28 கண்டுள்ள அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் மாவட்டத்தில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் சார்பான விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து இதனடியிற் குறிப்பிட்ட தேதிகளில் மாவட்ட வாரியாக தனிநபர் மூலம் நேரில் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்பொருள் சார்பாக கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
1. பெயர்ப் பட்டியலில் தகுதியுள்ள தலைமையாசிரியர் பெயர் எதும் விடுபட்டிருப்பின் தலைமையாசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணையின் நகலினை இணைத்து முதன்மைக் கல்வி அலுவலரின் விரிவான குறிப்புரையுடன் இச்செயல்முறைகள் கிடைக்கப் பெற்ற 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 2. அரசாணை (நிலை) எண்.528. பள்ளிக் கல்வி (ஏ1) துறை நாள் 31121997ல் தெரிவித்துள்ளவாறு, இணைப்பில் உள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களிடம் விருப்ப படிவத்தில் (Option Form) பதவி உயர்வு / பணி மாறுதலுக்கு விருப்பம் அல்லது விருப்பமின்மையிணை பெற்று, சார்ந்த தலைமையாசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அதன் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் அசல் விருப்ப உரிமை படிவம் ஆகியவை அனுப்பப்பட வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD DSE - DEO Panel - 2025-26 மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு தகுதியான தலைமை ஆசிரியர்கள் பட்டியல் PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.