UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 11, 2025

UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்!



UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்! UDISE+ data is 100% accurate and complete, based on the joint efforts of the State Project Director, Director of Elementary Education and Directors of Private Schools!

UDISE+ தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள்!

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள்

ந.க.எண்.1395/C1/UDISE Plus/SS/2025, நாள். .11.2025

பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - UDISE Plus தரவுகள் 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல்-தொடர்பாக.

பார்வை: 1. மத்திய அரசு கடிதம் D.O.Letter No.23-5/2025-Stats dated 01.10.2025

2. இவ்வலுவலக கடிதம் ந.க.எண்.1395/C1/UDISE+/SS/ 2025 நாள். 05/08/2025.

3. இவ்வலுவலக கடிதம் ந.க.எண்.1395/C1/UDISE+/ SS/ 2025 நாள். 30/10/2025. (2025-26)

பார்வை (2 & 3)60 கண்ட கடிதம் வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி UDISE தளத்தில் இக்கல்வி ஆண்டிற்கான பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பள்ளிகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

பள்ளிகளில் இக்கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் progression Activity பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. UDISE Plus தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் 30.11.2025க்குள் பள்ளி அளவிலிருந்து மாநில அளவு வரை சரி செய்வதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், இதனை சரிபார்ப்பதற்கான குழுக்கள் மற்றும் செயல்திட்டம் (Action Plan) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் விவரங்கள் துல்லியமானதாக இருக்கும் நிலையில் மட்டுமே, மாநில அளவிலான கல்விசார் குறியீடுகள் (Educational Indicators) சரியானதாக அமையும்.

மாவட்ட அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு), ஒருங்கிணைப்பாளர்கள்(DC- UDISE), வட்டார கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் (APO) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (Secondary, Elementary & Private Schools), மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளின் விவரங்களை UDISE Plus தளத்தில் துல்லியமாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்திட திட்டமிட்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தனியார் பள்ளிகள் இயக்குநர்

தொடக்கக் கல்வி இயக்குநர்

பள்ளிக் கல்வி இயக்குநர்

மாநிலத் திட்ட இயக்குநர்

பெறுநர்:அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்.

நகல்: அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வி துறை,சென்னை -09.

UDISE+-2025-26 நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்

UDISE Plus தரவுகள் 100% துல்லியமாக மற்றும் முழுமையாக 30.11.2025க்குள் பள்ளி அளவிலிருந்து மாநில அளவில் வரை சரி செய்வதற்காக கீழ்க்காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

பள்ளி அளவில் உள்ள 1. பள்ளித் தலைமையாசிரியர் தங்கள் பள்ளியின் ஏற்கனவே மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தரவுகளும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்யும் பொருட்டு பள்ளி விவரங்களை பள்ளி அளவில் Print எடுத்து ஆய்வு செய்து சான்றழித்தல் வேண்டும். 2. மாணவர்கள் வருகை பதிவேடு, ஆசிரியர் விவர பதிவேடு ஆகியவை கொண்டு தரவுகளை சரி பார்த்தல் வேண்டும்.

3. பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருப்பின் அதனை UDISE Plusல் சரி செய்தல் வேண்டும்

4. இப்பணியினை 17.11.2025க்குள் முடித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வட்டார வளமையத்தில் தெரிவித்தல் வேண்டும்.

வட்டார வளமைய அளவில் UDISE Plus தரவுகளை சரிபார்ப்பதற்கு வட்டார வளமைய அளவில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு), ஆசிரியர் வளமைய பயிற்றுநர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை ஆசிரியர்கள் (5) ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை அமைத்தல் வேண்டும்.

2. வட்டார அளவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இணைத்து Whatsapp குழுவை உருவாக்குதல் வேண்டும்.

3. தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளின் UDISE Plus தரவுகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும்.

4. பிழைகள் இருப்பின் உடனடியாக பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு சரிசெய்தல் வேண்டும். 5. அனைத்து பின்னர் UDISE Plus தரவுகளையும் சரிபார்த்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்டத் திட்ட அலுவலத்தில் 21.11.2025க்குள் தெரிவித்தல் வேண்டும்.

மாவட்ட அளவில்

1. மாவட்ட அளவில் UDISE Plus பணிக்காக CEO, DEO (Secondary, Elementary & Private Schools), APO, DC (UDISE+) and Master Resource Persons (MRPs) ஆகியோர் அடங்கிய ஒரு குழுவை நியமித்தல் வேண்டும். 2. வட்டார அளவில் இப்பணியினை மேற்கொள்பவர்களுடன் whatsapp குழு ஏற்படுத்தி அவ்வப்பொழுது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் தவறுகளை சரிசெய்தல் வேண்டும்.

3. வட்டார அளவில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை கொண்டு சரிபார்த்தல் வேண்டும்.

உதாரணமாக Infrastructure (Civil & ICT), CWSN, KGBV, Vocational, Preprimary மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் பட்டியலை சார்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் சரிபார்த்தல் வேண்டும்.

4. மாநில அளவில் நடைபெற்ற பயிற்சியில் வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் பிழைகளை உடனுக்குடன் சரி செய்தல் வேண்டும். 5. இப்பணியின் முன்னேற்றத்தை தங்கள் மாவட்டத்திற்கான மாநில ஒருங்கிணைப்பாளர்களிடம் அவ்வப்போது தெரிவித்தல் வேண்டும்.

6. 26.11.2025க்குள் இப்பணியினை முடித்து மாநில திட்ட அலுவலத்திற்கு தெரிவித்தல் வேண்டும்

மாநில அளவில்

1. மாநில அளவில் ஒரு குழு அமைத்தல் வேண்டும்.

2. மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களை உடனுக்குடன் தொடர்பு கொண்டு இப்பணிகளை கண்காணிக்க வேண்டும்.

தொடர்ந்து 3. EMIS தொழில்நுட்ப குழு மாவட்டங்களுக்கு தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனடியாக வழங்க வேண்டும்.

4. இப்பணியினை 28.11.2025க்குள் முடித்தல் வேண்டும்.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள்), உதவி திட்ட அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் வளமைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு) ஆகியோருக்கு மேற்கண்ட பணிகள் மேற்கொள்ளப்படுவதை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் உறுதி செய்யும் பொருட்டு வாரம் ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்துதல் வேண்டும்.

இப்பணியில் தவறு மற்றும் தொய்வு ஏற்படாமல் மேற்கொள்ளப்படுவதை மாவட்டம் சார்ந்த அனைத்து நிலை அலுவலர்கள் கண்காணித்திடல் வேண்டும்.

தவறு ஏற்படின் மாவட்டம் சார்ந்த அலுவலர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

UDISE+ FILL CLEAR DATA.

👇👇👇 CLICK HERE TO DOWNLOAD மாநிலத் திட்ட இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டுச்செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.