வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த படிவத்தை ‘ஆன்லைன்’ மூலம் பூர்த்தி செய்ய வசதி தேர்தல் ஆணையம் அறிவிப்பு Election Commission announces facility to fill out the Voter List Serious Correction Form online
1. காலதாமதத்தைத் தவிர்க்க, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் பூர்த்தி செய்யும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது.
3. தேர்தல் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று படிவங்களைக் கொடுத்து வாக்காளர் விவரங்களைப் பூர்த்தி செய்யும் பணியை டிசம்பர் 4-ந் தேதி வரை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
4. கடந்த ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
5. ஒரு மாதத்துக்குள் 6.34 கோடி வாக்காளர்கள் விவரங்களை நேரில் சரிபார்ப்பது கடினம் என்ற கேள்வி எழுந்தது.
6. பல பகுதிகளில் இன்னும் கணக்கீட்டு விண்ணப்பப் படிவம் கொடுக்கும் பணி தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
7. இந்தநிலையில், 'ஆன்லைன்' மூலம் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்புவதற்கான வசதியை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
8. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 9. வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in -ல் கணக்கீட்டுப் படிவத்தை 'ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
10. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழையலாம்.
11. இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி. எண்) அனுப்பப்படும்.
12. அந்த எண்ணை உள்ளிட்டபின், இணையப் பக்கத்தில் காட்டப்படும் 'கணக்கீட்டுப் படிவம்' (Fill Enumeration Form) என்ற இணைப்பைத் தேர்வு செய்யலாம்.
13. உள்நுழைந்த பிறகு, இணையப் பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை வாக்காளர் நிரப்ப வேண்டும்.
14. விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணையப் பக்கமானது 'e-sign' பக்கத்திற்கு மாறும்.
15. மீண்டும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும்.
16. இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர் ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் பொருந்தும் வாக்காளர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.