Classroom construction - 20 அரசு பள்ளிகளுக்கு ரூ.3.50 கோடியில் வகுப்பறை கட்டடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 9, 2025

Classroom construction - 20 அரசு பள்ளிகளுக்கு ரூ.3.50 கோடியில் வகுப்பறை கட்டடம்

20 அரசு பள்ளிகளுக்கு ரூ.3.50 கோடியில் வகுப்பறை கட்டடம் Classroom construction for 20 government schools at a cost of Rs. 3.50 crore

திருவள்ளூரில் 20 அரசு பள்ளிகளுக்கு ரூ.3.50 கோடியில் வகுப்பறை கட்டடம்

திருத்தணி, நவ. 10-

திருவள்ளூர் மாவட்டத் தில், எட்டு ஒன்றியங்களில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 20 வகுப்பறை கட்டடம் கட்ட, 3.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ஓரிரு நாளில் பணிகள் துவக்கப் பட உள்ளன.

திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள 14 ஒன் றியங்களில், மொத்தம் 526 ஊராட்சிகள் உள் ளன. ஊராட்சிகளில் 984 தொடக்க பள்ளிகள், 257 நடுநிலைப் பள்ளிகள், 130 உயர்நிலை பள்ளிகள்,

119 மேல்நிலைப் பள்ளி கள் என, மொத்தம் 1,490 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

ஒன்றிய நிர்வாகம், தொடக்க மற்றும் நடுநி லைப் பள்ளிகளை பராமரித் தும், புதிய வகுப்பறைகள், ஆய்வகம் போன்ற கட்ட டங்களை கட்டி வருகிறது.


இந்நிலையில், 2024 25ல், நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், தொடக்க மற்றும் நடுநிலைப் பள் ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி கள், கூடுதல் வகுப்பறை கள், கணினி வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட, 3.50 கோடி ரூபாயை, திரு வள்ளூர் கலெக்டர் பிரதாப் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதியின் மூலம் எல்லாபுரம், மீஞ்சூர், பூந் தமல்லி, சோழவரம், திருத் தணி, திருவாலங்காடு, வில்லிவாக்கம் மற்றும் புழல் ஆகிய எட்டு ஒன்றி யங்களில், கூடுதல் வகுப்ப றைகள் கட்ட 'டெண்டர்' விடப்பட்டுள்ளது.

இந்த பணிகள் மூன்று மாதத்திற்குள் முடித்து, பயன்பாட்டிற்கு விட வேண் டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.