பென்ஷன் குழுவின் இடைக்கால அறிக்கை நகல் கொடுங்க - CPS ஒழிப்பு இயக்கத்துக்கு பதிலளிக்காமல் அரசு மவுனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 12, 2025

பென்ஷன் குழுவின் இடைக்கால அறிக்கை நகல் கொடுங்க - CPS ஒழிப்பு இயக்கத்துக்கு பதிலளிக்காமல் அரசு மவுனம்

The government had promised to implement the Old Pension Scheme (OPS) if elected in 2021.

A committee led by IAS officer Gagandeep Singh Bedi was formed to compare pension schemes.

The committee submitted only an interim report on September 30, 2025, and requested more time.

The CPS Abolition Movement filed an RIT request for a copy of the interim report and the government order granting the extension, but received no response.

Give a copy of the interim report of the Pension Committee - Government silent without responding to the CPS Abolition Movement

In the 2021 election manifesto, the DMK promised that the old pension scheme would be implemented if it came to power. However, that promise has not been fulfilled yet. Chief Minister Stalin ordered the formation of a committee headed by IAS officer Gagandeep Singh Bedi to study which of the three schemes, the old pension scheme, the new pension scheme, and the integrated pension scheme, is better. Chief Minister Stalin announced that the committee would submit its report on September 30. The Gagandeep Singh Bedi committee held consultations with government employee and teacher association representatives. All the government employee and teacher associations who participated in the consultation said that the old pension scheme should be implemented. The committee appointed by the government announced that it would only submit an interim report on September 30. It asked for more time as some companies including LIC had to be consulted. The Tamil Nadu government granted permission for this.

More than 40 days have passed since the extension was granted, what is the concerned committee doing? There is no answer to the various questions of government employees and teachers as to who it is delaying for. In this situation, where did the committee submit the interim report regarding the pension? A copy of that interim report is required.

If the pension committee has been granted an extension, a copy of the government order issued by the Tamil Nadu government fixing the deadline should be provided, said Frederick Engels, coordinator of the CPS Abolition Movement, in a Right to Information Act query last month on the 4th. There has been no response from the government for a month. Due to this, an appeal was made on the 5th. There is no answer yet to the question of what the government appointed committee did for 6 months. 40 days ago பென்ஷன் குழுவின் இடைக்கால அறிக்கை நகல் கொடுங்க - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்துக்கு பதிலளிக்காமல் அரசு மவுனம்

திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய பென் ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக கொடுத்திருந்தது. ஆனால், அந்த வாக்குறு தியை இதுவரை நிறைவேற்றவில்லை. பழைய பென்ஷன் திட்டம், புதிய பென்ஷன் திட்டம், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகிய 3 திட்டங்களில் எது சிறந்தது என்று ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங்பேடி தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த குழு செப் டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம் சுகன்தீப் சிங்பேடி குழு ஆலோசனை நடத்தியது. ஆலோசனையில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் சங்கங்களும் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த வேண்டும் என தெரிவித்தன.

அரசு நியமித்த குழு செப் டம்பர் 30ம் தேதி இடைக்கால அறிக்கையை மட்டும் சமர்ப்பிப்பதாக அறிவித்தது. எல்ஐசி உள்ளிட்ட சில நிறுவனங்களிடம் ஆலோ சனை நடத்த வேண்டி இருப்பதால் கூடுதல் அவகாசம் கேட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. கூடுதல் அவகாசம் வழங்கி 40 நாட்கள் கடந்த நிலையில் சம்பந்தப்பட்ட குழு என்ன செய்கிறது? யாருக்காக தாமதம் செய்து வரு கிறது என்ற அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு கேள்விக்கு எந்த விடையும் கிடைக் கவில்லை.

இந்நிலையில், பென்ஷன் தொடர்பாக இடைக்கால அறிக்கையை யாரிடம் குழு வழங்கியது? அந்த இடைக்கால அறிக்கை யின் நகல் வேண்டும். பென்ஷன் குழுவுக்கு காலஅவகாசம் வழங்கியிருந்தால் காலக்கெடு நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தால் அதன் நகல் வழங்க வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஒருங்கி ணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் கடந்த மாதம் 4ம் தேதி கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அரசிடம் இருந்து ஒரு மாதமாக எந்த பதிலும் வரவில்லை. இதனால், சுடந்த 5ம் தேதி மேல்முறையீடு செய்துள்ளார்.

அரசு அமைத்த குழு, 6 மாதம் என்ன செய்தது என்ற கேள்விக்கே இது வரை பதில் இல்லை. 40 நாட்களுக்கு முன்பு அரசிடம் வழங்கிய இடைக்கால அறிக்கையின் நகல் கேட்டாலும், யாரிடம் அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டது என்ற கேள்விக்கும் அரசு மவுனத் தையே பதிலாக கொடுக்கிறது. இந்த மவு னத்துக்கு என்ன காரணம்? உண்மையிலேயே குழு இடைக்கால அறிக்கை கொடுத்ததா? இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைக் காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குழப் பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.