CG State Level Training Proceedings - உயர் கல்வி வழிகாட்டி கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி!! State-level training for higher education mentors!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 18, 2025

CG State Level Training Proceedings - உயர் கல்வி வழிகாட்டி கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி!! State-level training for higher education mentors!!



உயர் கல்வி வழிகாட்டி கருத்தாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி!!!

உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக 2025 2026 கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பகிர ஏதுவாக மாநில அளவிலான கருத்தளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மாவட்ட அளவில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கினர். உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுடன் (9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பு ஆசிரியர்கள்) பயிற்சியில் வழங்கப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பயிற்சியானது 9 முதல் 12 ஆம் வகுப்புகள் சார்ந்த கருத்தாளர்களுக்கு வருகின்ற 19.11.2025 மற்றும் 20.11.2025 தேதிகளில் இணையவழியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விணையவழி பயிற்சிக்கான Link மாநிலத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு விரைவில் பகிரப்படும். இந்த இணையவழி பயிற்சிக்கு ஒரு மாவட்டத்திற்கு 15 கருத்தாளர்கள் வீதம் மாவட்ட கண்காணிப்பு அறையில் சிறப்பாக செயல்படும் 5 இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் (5 BT Teachers). 5 வட்டரா வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (5 BRTEs) மற்றும் 5 முதுகலை ஆசிரியர்கள் (5 PG Teachers) மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களை இப்பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்விணையவழி பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து கருத்தாளர்களும் பயிற்சி பெற்ற பிறகு மாவட்ட/வட்டார அளவிலான இணையவழி பயிற்சி சார்ந்து மாவட்டத்தில் திட்டமிடல் கூட்டம் நடத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து, இக்கருத்தாளர்கள் தங்களது மாவட்டத்தில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்களுக்கு 24.11.2025 முதல் 28112025 ஆம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு இணையவழி பயிற்சி வழங்குதல் வேண்டும். ஒரு பள்ளியில் உள்ள 250 மாணவர்களுக்கு ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர் என்ற விகித அடிப்படையில் இப்பயிற்சிக்கு ஆசிரியர்கள் பங்கேற்பதை உறுதி செய்திடல் வேண்டும். பயிற்சி சார்ந்த வருகைப்பதிவை TNSED செயலில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சி வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.

மாநில அளவில் நடைபெறும் இணையவழி பயிற்சிக்கு அந்தந்த மாவட்டங்களில் ஏற்பாடு செய்யபடும் மையத்தில் இணையவழி பயிற்சிக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் அனுமதி வழங்கப்பட வேண்டும். இப்பயிற்சியில், மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மேலும், இப்பயிற்சியில் பங்குபெறும் கருத்தாளர்களுக்கு காலை தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படவேண்டும். இதற்கான செலவினத்தை மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி வங்கி கணக்கில் (Miscellaneous account CG Head) மீதமுள்ள நிதியை பயன்படுத்திக் கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இணைப்பு: மாநில அளவிலான இணைய வழி பயிற்சிக்கான அட்டவணை

CLICK HERE TO DOWNLOAD CG State Level Training Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.