ஆசிரியர் தகுதித் தேர்வு - உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம் : தேர்வர்கள் கருத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 18, 2025

ஆசிரியர் தகுதித் தேர்வு - உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம் : தேர்வர்கள் கருத்து

Teacher Eligibility Test - Psychology questions are a bit difficult: Candidates' opinions - ஆசிரியர் தகுதித் தேர்வு - உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம் : தேர்வர்கள் கருத்து

உளவியல் கல்வி வினாக்கள் சற்று கடினம்: தேர்வர்கள் கருத்து

ஆசிரியர் தகுதித் தேர்வு சனிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் தாளில் கேட்கப்பட்ட உளவியல் கல்வி சார்ந்த வினாக் கள் மட்டும் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர். இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணயில் சேர தகுதித் தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர் வில் முதல் தாள் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2-ஆம் தாள் பட்ட தாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது.

い டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம்(டி ஆர்பி) நடத்தி வருகி றது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படாத நிலையில், 2025-ஆம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டி ஆர்பி கடந்த ஆக.11 இல் வெளியிட்டது. இந்த தேர்வெழுத மொத் தம் 4 லட்சத்து 80,808 பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். " இதையடுத்து நடப்பாண்டுக்கான டெட் தகுதித் தேர்வு சனிக்கிழமை (நவ.15) தொடங்கியது. தொடக்க நாளில் நடைபெற்ற முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் 367 மையங்களில் 92,412 பட்டதாரிகள் எழுதினர். 14,958 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனிடையே, முதல்தாள் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக தேர்வர் கள் கருத்து தெரிவித்தனர். கணிதம், தமிழ் ஆகிய வினாக்கள், பள்ளிப் புத்தகங்களிலிருந்து அதிகம் கேட்கப்பட்டதாகவும், உளவியல் கல்வி சார்ந்த வினாக்கள் மட்டும் கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரி வித்தனர்.

அதனுடன் வினாத்தாளில், 'தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்', 'தமிழ்நாடு எனும் சொல், முதலில் ஆளப்ப டும் இலக்கியம் எது', 'இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்பட் டவர் யார்' போன்ற வினாக்கள் கேட்கப்பட்டன.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1,241 மையங்களில், டெட் 2-ஆம் தாள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.16) நடைபெறுகிறது. இந்தத் தேர் வில் 3.73 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.