Special TET - பொறுப்பாளர்களுடன் நாளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆலோசனை
Special TET தேர்வு சார்ந்து பொறுப்பாளர்களுடன் நாளை மாலை 5.00 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆலோசனை
Special TET - All Teachers Union Representatives Meeting to be held on 21.11.2025 at 5.00 PM - On behalf of - Proceedings of the Tamil Nadu Director of Elementary Education Special TET - அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் 21.11.2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறுதல் - சார்பாக - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6. 5.5.020353/01/2023, . 20.11.2025.
பொருள் :
தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் 21.11.2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெறுதல் - சார்பாக.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 21.11.2025 மாலை 5.00 மணியளவில் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள புதிய கட்டட முதல் தள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஓர் அமைப்பிற்கு ஒருவர் என்ற வீதத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநர்
2017/25
பெறுநர்
அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள்
நகல்
1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம், சென்னை-09 தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது
2. மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் சிறப்பு நேர்முக உதவியாளர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.