SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 20, 2025

SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை

SIR படிவம் - OTP குறித்த சிறப்பு எச்சரிக்கை

நீங்கள் அனைவரும் SIR படிவத்தை நிரப்பும்போது உங்கள் மொபைல் எண்ணைக் கொடுக்கிறீர்கள்.

எங்கிருந்தும் உங்களுக்கு அழைப்பு வந்து உங்கள் மொபைலில் பெறப்பட்ட OTP ஐ உங்கள் SIR சரிபார்ப்புக்கு வழங்குமாறு கேட்டால், நான் தேர்தல் அலுவலகத்திற்குச் சென்று பேசிக் கொள்கிறேன் அல்லது எனது BLO விடம் மட்டுமே கொடுப்பேன் என்று நீங்கள் கூற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதற்குப் பிறகும், அவர்கள் உங்களை OTP சொல்லும்படி கேட்டு கட்டாயப்படுத்தினால், யாருக்கும் OTP கொடுக்க வேண்டாம்



ஆசிரியைகளிடம் இரவில் ஓ.டி.பி., கேட்டு 'டார்ச்சர்' எஸ்.ஐ.ஆர்., பணிகளால் அதிருப்தி - 'Torture' by asking teachers for OTP at night - Dissatisfied with S.I.R work!

மதுரை, நவ.16-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (என்.ஆர்.) பணிகள் தொடர்பாக ஆசிரியை களின் அலைபேசிகளில் விலும் அலுவலர்கள் தொடர்பு கொண்டு ஓடி.பி. (ஒன் டைம் பாஸ்வேர்டு) கேட்டு டார்ச்சர்' செய்வதாக சர்ச்சை எழுந் துள்ளது.

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் பல்வேறு குழப்பங் களுடன் நடக்கிறது. ஆறரை கோடிக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு அதற்கேற்ப ஆட்கள் நியமிக்க வில்லை. தற்மோது பணியில் ஈடுபடுவோருக்கு உரிய பயிற்சி யும் அளிக்கவில்லை என தேர் தல் கமிஷனின் அவசர நடவடிக் கைகளை கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன.

ஒரு பி.எல்.ஓ.,விற்கு ஆயி ரத்திற்கும் மேல் விண்ணப் பங்கள் வரை வழங்கப்பட் டுள்ளன. விண்ணப்பங்களை திரப்பும் போது வாக்காளர்கள் கேட்கும் பல சந்தேகங்களுக்கு பி.எல்.ஓ.,க்களுக்கே பதில் அளிக்கத் தெரியவில்லை.

இதற்கிடையே எஸ்.ஐ.ஆர். பணி மந்தமாக நடக்கும் மதுரை. திருப்பூர் உட்படசுக்கும் மேற் பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி ஆசிரி யர்களுக்கு கூடுதல் பணி ஒதுக்கி கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ள அவர்களுக்கு பி.எல்.ஓ.,க்கள் திரப்பிய விண்ணப்பங்களை எஸ்.ஐ.ஆர்., செயலியில் பதிவேற்றம் செய்வதும், வாக் காளர்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை வழங்கி, நிரப்பியவற்றை பெற்று மண்டல தேர்தல் அலுவலகத்தில் ஒப்ப டைக்கும் பணியும் வழங்கப்பட் டுள்ளன. மண்டல தேர்தல் அலுவலகள் கனி அளிக்கப்படும் லின் ணப்பங்கள், நள்ளிரவு வரை எ.ஐ.ஆர்., செயலியில் பதிவேற்றம் செய்யப்படு இன்றன. பி.எல்.ஓ.,க்களான பெண் ஆசிரியர்களின் அலைபே சிகளுக்கு செல்லும் ஒ.டி. பி.யை கெட்ட அலுவலர்கள் நன்விரலிலும் அலைபேசியில் அழைப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். சிலருக்கு குடும்பத்தில் நெருக்கடியும் ஏற்ப டுவதாக புலம்புகின்றனர்.

இதுகுறித்து ஆசிரியைகள் கறியதாவது: தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள விண்ணப்பங் கள் அடிப்படையில் தினம் 100 பேரை சந்தித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால் பஸ் விகளில் பாடம் நடத்திவிட்டு இப்பணியை செய்வதால் குறைத் தது பேரை கூட சந்திக்க முடிய வில்லை. இதுதொடர்பாக எவ்வித பயிற்சியும் அளிக்கவில்லை. நினைத்தால் பயிற்சி முகாம் என வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்புகின்றனர். எங்கிருக் தாலும் அவசரகதியில் ஓட வேண்டியுள்ளது.

இரவில் ஓ.டி. பி., கேட்பதால் பெண் அலுவ வர்களுக்கு கடும் மனஉளைச் ச ஏற்படுகிறது. கோனாவில் எஸ்.ஐ.ஆர்., பணி அழுத்தம் காரணமாக பி.எல்.ஓ., ஒருவர் உயிரிழத்துள்ளார்.

அந்த நிலை தான் தமிழகத்திலுள்ள பெரும் பாலான பி.எல்.ஓ.,க்களுக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் உள் ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.