Physical Director Grade 1 to Physical Director Grade 2 Panel List Released - JD (HS) Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, November 20, 2025

Physical Director Grade 1 to Physical Director Grade 2 Panel List Released - JD (HS) Proceedings



Physical Director Grade 1 to Physical Director Grade 2 Panel List Released - JD (HS) Proceedings

பொருள் -

தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 01.01.2024 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிமாறுதல்/பதவி உயர்வு வழங்கத் தகுதி வாய்ந்த நபர்களின் தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் சார்பு.

பார்வை

1. தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகள் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) பள்ளிக்கல்வித் துறை, நாள்: 30.01.2020. 14, (மேல்நிலைக்கல்வி)

2. சென்னை-06. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.060272/டபிள்யு3/இ2/2025, நாள்-31.10.2025.

3. அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்.

01.01.2025 நிலவரப்படி உடற்கல்வி இயக்குநர் நிலை 2 பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆக பணிமாறுதல் பெற தகுதி வாய்ந்த நபர்களின் உத்தேச முன்னுரிமைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு பார்வை(2)ல் காண் செயல்முறைகளின்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை -2 பணிபுரிபவர்கள் கல்வித்தகுதிகள், தற்போதுள்ள பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாறுதல் பெற்று இருப்பின் அதன் விவரம். கடந்த 3 ஆண்டுகளில் பதவி உயர்வினை துறப்பு செய்து இருப்பின் அதன் விபரங்கள். உரிய கல்வித்தகுதியுடன் பணிமாறுதலுக்கு தகுதி பெற்றோர் எவரேனும் விடுபட்டு இருப்பின் அதன் விவரங்கள் ஒழுங்கு நடவடிக்கை நிலுவை ஏதுமிருப்பின் சரிபார்த்து அனுப்பவும் நீக்கம், சேர்க்கை மற்றும் திருத்தம் ஏதுமில்லையெனில் இன்மை அறிக்கையினையும் பெற்று அனுப்பவும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு உத்தேச முன்னுரிமைப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம். மற்றும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தேர்ந்தோர் பெயர் பட்டியல் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆசிரியர்களுக்கும் அனைத்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பபள்ளிகளுக்கும் தகவல் அளித்து ஒப்புகை பெற்று கோப்பில் பராமரிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த உடற்க்கல்வி இயக்குநர் நிலை 2 ஆசிரியர்களது பணி விபரங்களையும் கல்வித்தகுதி சான்றுகளையும் மீண்டும் ஒரு முறை சரிபார்த்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பதவி உயர்வு வழங்கப்பட்ட பின்னர் தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். கலந்தாய்வு நாள் குறித்த விபரம் தனியே தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு - தேர்ந்தோர் பெயர் பட்டியல்.

CLICK HERE TO DOWNLOAD Physical Director Grade 1 to Physical Director Grade 2 Panel List Released - JD (HS) Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.