Shield for the best schools for the year 2024 - 2025 - Awarding of shields to the selected best schools for the year 2024-25 - Proceedings of the Tamil Nadu Director of Elementary Education 10.11.2025 - 2024 - 2025ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் - தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல் - தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 10.11.2025
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
5.5.6.008083/3/2025, 10.11.2025
பொருள்
தொடக்கக் கல்வி தொடக்கக் கல்வி இயக்ககம் அரசு / ஊராட்சி / நகராட்சி/ மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்குதல் - தொடர்பாக.
பார்வை: 1
அரசாணை (நிலை) எண். 190. பள்ளிக் கல்வித் துறை, நாள். 04.06.1998.
2 அரசாணை (நிலை) எண்.137. பள்ளிக் கல்வித் . . 20.05.1999.
3 அரசாணை (நிலை) எண்.73 பள்ளிக் கல்வித் (எஸ்.2) துறை, நாள். 20.03.2008.
4 தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 008083 / சி3 / 2025, .28.04.2025, 08.09.2025 மற்றும் 10.09.2025.
5 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்.
பார்வை (4)இல் காணும் இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகளின்படி நியமனம் செய்யப்பட்ட மாவட்ட தேர்வுக் குழு அலுவலர்களால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அவர்களால் கேடயம் வழங்கப்பட உள்ளது. எனவே தொடர்புடைய பள்ளியின் தலைமையாசிரியர் 14.11.2025 அன்று காலை 9.00 மணிக்கு காரைக்குடி, அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு தவறாது வருகை புரிந்து கேடயத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சார்ந்த பள்ளிகளுக்கு கேடயங்கள் வழங்கியமைக்கான 'ஒப்புதல்' சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து நிலையான பதிவேட்டில் 'ஒப்பம்' பெற்று வைக்கப்படவேண்டும் எனவும், மாநிலக்கணக்காயர் / துறைத் தணிக்கை அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளும் போது இப்பதிவேடு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலருக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பு :
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்
CLICK HERE TO DOWNLOAD தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 10.11.2025 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.