ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) ஊடகச் செய்தி - 17.11.2025 - 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர் - ஆசிரியர் -அரசுப்பணியாளர்கள் 18.11.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 17, 2025

ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO) ஊடகச் செய்தி - 17.11.2025 - 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர் - ஆசிரியர் -அரசுப்பணியாளர்கள் 18.11.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம்



வணக்கம். தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்அமைச்சர் அவர்களின், வாக்குறுதியை நிறைவேற்ற நினைவுபடுத்தவும், ஜாக்டோ ஜியோவின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு கூட்ட முடிவின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் நாளை 18.11.2025 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

ஜாக்டோ ஜியோவின் முடிவின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் (18.11.2025) அடையாள வேலை நிறுத்தத்தினை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காலை 10.00 மணி தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி முதல் 1 மணிவரை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அன்புடன்

திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்


ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

ஊடகச் செய்தி

.17.11.2025

10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர் - ஆசிரியர் -அரசுப்பணியாளர்கள் (நாளை)18.11.2025 ஒரு நாள் வேலை நிறுத்தம்

ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளைவலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களது போராட்டக் டக் களத்திற்கு வந்து வந்து எங்களது கோரிக்கைகள் ௧கள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு தேர்தல் வாக்குறுதியிலும் அச்சடித்து உறுதிப்படுத்தினார். இலட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர்கள் தேர்தல் களத்தில் முழு ஆதரவளித்தனர். முதல்வர் ஆன பின்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டிலும், 2022 ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டிலும் கலந்து கொண்டு இந்த ஆட்சி உங்களால் அமையப்பெற்றது. உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆகவே கொரோனா காலகட்டத்திலும் சென்னை தூத்துக்குடி பெரு வெள்ளத்திலும் இந்த ஆட்சியோடு கரம்கோர்த்து அரசு ஊழியர், ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் பலபேர் தனது இன்னுயிரை இழந்து மேற்கண்ட இடர்பாடுகளிலிருந்து மீள முழு ஆதரவளித்தனர். ஆகவே எங்களது 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எப்பொழுதெல்லாம் போராடுகிறோமோ அப்பொழுதெல்லாம் அழைத்து பேசி ஆறுதல் படுத்தினாரே தவிர நான்காண்டுகள் கழிந்த பின்பும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

எனவே கடந்த 27.01.2025 அன்று ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி நான்கு கட்ட போராட்டம் திட்டமிட்டோம். அதன் ஒரு பகுதியாக 25.02.2025 மறியல் போராட்டத்தை நோக்கியிருந்த சூழலில் 24.02.2025 அன்று மாண்புமிகு நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஜாக்டோ-ஜியோவை பேச்சவார்த்தைக்கு அழைத்து நான்கு வார கால அவகாசம் தெரிவித்து அதற்குள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டது. 13.03.2025 மீண்டும் ஜாக்டோ-ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தொகுப்பூதிய, மதிப்பூதிய, சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரண்முறைப்படுத்துவது. ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள், ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார்.

அதனடிப்படையில் 12 இலட்சம் அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் அரசுப்பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து எஞ்சிய சில மாதங்களே உள்ளநிலையில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாத காரணத்தினால் (நாளை) 18.11.2025 ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ மாநில மையம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.