குருநானக் ஜெயந்தி RH / RL குறித்த RTI தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, November 17, 2025

குருநானக் ஜெயந்தி RH / RL குறித்த RTI தகவல்

RTI information on Guru Nanak Jayanti RH/RL - குருநானக் ஜெயந்தி RH / RL குறித்த RTI தகவல்

நண்பர்களே வணக்கம் 🙏

என்ன இது மறுபடியும் முதலில் இருந்தா? என தவறாக நினைக்க வேண்டாம்

குருநானக் ஜெயந்தி என்பது சீக்கியர்களின் முதல் குருவான குருநானக்கின் பிறந்த நாளைக் கொண்டாடும் புனிதமான பண்டிகையாகும்.

5/11/25 RH/RL Guru Nanak jayanti உண்டு என பதிவு செய்து இருந்தோம் 🙏...

சிலர் இல்லை என்று மறுத்துள்ளனர்...

சிலர் DEO office இல் கேட்டோம்... கிடையாது என்று சொல்லி விட்டனர்...

சிலர் தவறாக RL/RH போட்டால் பின்னர் தணிக்கை தடை ஊதியம் திருப்பி செலுத்த வேண்டும் என்ற சொன்னார்கள்..

ஒரு படி மேலே சென்று சிலர் முதலில் RL ok என்று சொல்லி விட்டு 5/11/25 அன்று கடைசியில் இல்லை சார் RL கொடுத்தவர்களுக்கு CL என போட்டு உள்ளார்கள் என விதவிதமான பதிவுகள் 🙏

RL/RH இல்லை என்ற தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்ய..

2019 இல் guru nanak jayanti எடுத்து விட்டார்கள்???

2022 அரசாணை 14 பதிவு செய்தேன்... இல்லை சார் 2024 இல் ஒரு அரசாணை மூலம் guru nanak jayanti நீக்கப்பட்ட தாம் என சொன்னார்கள் 🙏

ஒரு சிலர் list of holiday GO 792 ஐ பகிர்ந்து இதில் Guru Nanak jayanti இல்லை என்றார்கள் 🫣

நிற்க 🙏

5/11/25

RH/RL உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில்

RTI மூலம் 7/11/25 இல் தகவல் கேட்டேன்

இன்று 12/11/25 இல் கிடைக்கப் பெற்ற RTI படி

அரசாணை எண் 14, நாள் 01.02.2022 இன் படி வரிசை எண் 25 இல் குரு நானக் ஜெயந்தி RH/RL உண்டு

தகவலுக்காக

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்...

மதுரை மாவட்டம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.