SSLC Nominal Roll தயாரிக்க 05.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு PDF
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம். சென்னை-6 2025 -2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்தல் வழங்குதல் - தொடர்பாக. கூடுதலாக கால அவகாசம்
பார்வை:
1.அரசுத் தேர்வுகள் இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்: 31.10.2025
2.இவ்வலுவலக இதே எண்ணிட்டக் கடிதம் நாள்.19.11.2025
பார்வை 1-ல் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரது விவரங்களை 31.10.2025 முதல் 19.11.2025 நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பார்வை 2-ல் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், பத்தாம் வகுப்பு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 27.11.2025 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது, பல்வேறு பள்ளிகள் இதுநாள் வரையிலும் பெயர்ப்பட்டியல் தயாரிப்பு பணிகளைத் துவங்கிடாதக் காரணங்களால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக இறுதி வாய்ப்பாக, மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு 05.12.2025 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசியர்களைத் தொடர்புகொண்டு மேற்காண் பணியினை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
நகல்:
ஒம்/-இயக்குநர்
1. மாநில திட்ட இயக்குநர்.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் -தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
2. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம்.
3. இயக்குநர், தனியார் பள்ளிகள் இயக்ககம். - தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு PDF
Thursday, December 4, 2025
New
SSLC Nominal Roll தயாரிக்க 05.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!
SSLC Science practical
Tags
Nominal Roll,
Nominal Roll Downloading,
SSLC,
SSLC Nominal Roll,
SSLC Regular Students,
SSLC Science practical
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.