ஆசிரியர்களுக்கு பி.எல்.ஓ., பணி -
மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் BLO assignment for teachers - risk of affecting students' education
ஒட்டுச்சாவடி நிலை அலுவலர் என்ற பி.எல்.ஓ., பணிகளில் ஆசிரியர் களை நியமித்துள்ளதால், மாணவர்களின் கற்பித்தல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர் மாவட் டத்தில் பி.எல்.ஓ., பணி களில் அங்கன்வாடி பணி யாளர்கள், சத்துணவு பணியாளர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் தேசிய வாழ்வாதார திட்ட ஊழியர் கள் போன்றோரை ஈடுப டுத்த, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
தற்போது மாவட்டத் தில் உள்ள 944 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்
பிக்கும் ஆசிரியர்களும், பி.எல்.ஓ., பணிகளில் அதிகளவில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
முன்னதாக, பி.எல்.ஓ. பணியில் இருந்து ஆசிரி யர்கள் விடுவிக்கப்படுவர் என, அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது மீண் டும் அவர்கள் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளதால், கற் பித்தல் பணிகளில் தேக்கம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, திருவா லங்காடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: கிராமப்புறங்களில், பள் ளிக்கு ஒரு ஆசிரியர் என்ற கணக்கில் பி.எல்.ஓ. பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள் பெரும்பாலான ளனர்.
கிராமப்புற பள்ளிகள், 'ஈரா சிரியர்' பள்ளிகளாகவே உள்ளன.
அதில், ஒரு ஆசிரியர் பி.எல்.ஓ., பணிக்கு சென் றுவிட்டால், மீதமுள்ள ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியர்களின் பணியை யும் சேர்த்து கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.
பள்ளிகளில் ஏற்கனவே நிலவும் ஆசிரியர் பற்றாக் குறை, மாணவர்களை திறன், 'ஸ்லாஸ்' போன்ற சிறப்பு தேர்வுகளுக்கு தயார் படுத்தும் பணிச்சுமை ஆகி யவற்றுக்கு இடையில், தற் போது கூடுதல் பணியையும் ஆசிரியர்களுக்கு வழங்குவ தால், கற்றல் பணி நிச்சய மாக பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sunday, November 9, 2025
New
ஆசிரியர்களுக்கு BLO பணி - மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.